அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியலமைப்பு 54 ஆவது யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு யாராவது பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் அல்லது உள்ளூராட்சி நிறுவன உறுப்பினராயின் அவ்வாறானவர்கள் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அங்கத்தவராவதற்கான நியமனத்திற்காக தகுதி பெற முடியாது.
அவ்வாறே ஆணைக்குழுவின் அங்கத்தவராக நியமனம் பெறுவதற்கு அரசாங்க சேவையின் அரசாங்க அதிகாரி ஒருவர் அல்லது நீதிமன்ற அதிகாரி அல்லது அரச சேவையில் நிரந்தர நியமனத்தில் பணியாற்றுபவர் மேற்படி நியமனம் நடைமுறைக்கு வரும்போது, அந்த நபர் பதவி நீக்கம் செய்யப்படுவார், மேலும் அந்த நபர் பொது அதிகாரி அல்லது நீதித்துறை அதிகாரியாக மேலும் நியமனம் செய்ய தகுதியற்றவர்.
இதற்கான விண்ணப்பம் பாராளுமன்ற இணையத்தளத்தில் (www.parliament.lk) ‘அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிற்கான அங்கத்தவர் நியமனம்’ எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்திற்கிணங்க பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை 2024 செப்டம்பர் 23ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் “அரசியலமைப்பு சபையின் பொதுச் செயலாளர், அரசியலமைப்பு சபை – அலுவலகம், இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டை” எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பத்தின் கடித உரையின் இடது பக்க அல்லது மின்னஞ்சல் விடயத்தில் “அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிற்காக அங்கத்தவர் நியமனம்” என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.