அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை மாவட்டம் ராமர் இலங்கையில் யுத்தம் முடிந்து அயோத்தி திரும்பியதும், முனிவர்களும் அவரவர் இருப்பிடம் திரும்பினர். அவர்களில் துர்வாச மகரிஷி, இத்தலம் வழியாக சென்றார். ஓரிடத்தில் சிவலிங்கத்தைக் கண்டு பூஜித்தார். பிற்காலத்தில் இந்த லிங்கம் புதைந்து போனது. இடையன் ஒருவன் இவ்வழியாக பால் கொண்டு சென்றபோது, தொடர்ந்து இவ்விடத்திலுள்ள மரத்தின் வேர் தட்டி, தடுக்கி விழுந்து பால் கொட்டியது. அதை வெட்டியபோது அவ்விடத்தில் ரத்தம் பீறிட்டது. பயந்து போன இடையன் அவ்விடத்தைத் தோண்டிய போது, […]