குடும்பங்களுக்கு ஏற்ற வசதிகளை கொண்ட 125சிசி ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான டெஸ்டினி 125 முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட டிசைன் பெற்று மேம்பட்ட என்ஜின் 5 புதிய நிறங்களை பெற்று விற்பனைக்கு ஹீரோ மோட்டோகார்ப் வெளியட உள்ளது.
சிவப்பு, வெள்ளை, கருப்பு, மெக்னெட்டா நீலம், மற்றும் காஸ்மிக் நீலம் என ஐந்து விதமான நிறங்களுடன் மூன்று விதமான வேரியண்டுகளை பெற்று டாப் வேரியண்டில் டிஸ்க் பிரேக்குடன், டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று Xtec கனெக்ட்டிவிட்டி அம்சங்கள், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் ஆகியவற்றை பெற உள்ளது.
கூடுதலாக டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் 90/90-12 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல், வளைவுகளில் திரும்பிய உடன் தானாகவே அனைகின்ற டர்ன் இண்டிகேட்டர், க்ரோம் ஸ்டைலை அப்ரானில் பெற்று காப்பர் நிறத்தை டாப் மாடல்களிலும்,மற்ற வேரியண்டுகளில் க்ரோம் மட்டும் பெற்றிருக்கும்.
9 BHP பவர் மற்றும் 10.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 124.6 cc என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றிருக்கும். முழுமையான எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட், எல்இடி டெயில்லைட் பொருத்தப்பட்டு மிகவும் ரெட்ரோ ஸ்டைலை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.
அடுத்த இரு தினங்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ள 2024 ஹீரோ டெஸ்டினி 125 விலை ரூபாய் 81,000 முதல் துவங்கலாம். இந்த மாடலுக்கு போட்டியாக டிவிஎஸ் ஜூபிடர் 125, ஹோண்டா ஆக்டிவா 125, யமஹா ஃபேசினோ, சுசூகி ஆக்செஸ் 125 போன்ற மாடல்கள் உள்ளன.