இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் சிறப்பம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
2024 Honda Activa
இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான ஹோண்டா நிறுவனத்தின் 110cc ஆக்டிவா ஆரம்பத்தில் 6ஜி என்று அழைக்கப்பட்டு வந்தாலும் கூட தற்பொழுது ஆக்டிவா என்று அழைக்கப்படுகிறது.
ஆக்டிவா ஸ்கூட்டரில் 110சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு மிகச் சிறப்பான வகையில் ஆன டிசைனை கொண்டிருப்பதுடன் மெட்டல் பாடியுடன் பல்வேறு நிறங்கள் கொண்டு இளைய தலைமுறை முதல் குடும்பங்கள் வரை கொண்டாடும் வகையிலான வரவேற்பினை பெற்றிருக்கின்றது.
ஆக்டிவா 2024 மாடலில் ஏர்-கூல்டு, 109cc, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 7.8hp மற்றும் 5,250rpm-ல் 9Nm டார்க் வழங்கும். கூடுதலாக OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கும் ஏற்ற அம்சத்துடன் விளங்குகின்றது.
அன்டர் போன் ஃபிரேம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள ஆக்டிவா 110 ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் யூனிட் ஸ்விங் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் பரிமாணங்கள் நீளம் 1833மிமீ, அகலம் 697மிமீ மற்றும் உயரம் 1156 மிமீ கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 1260 மிமீ பெற்று 162மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றதாக உள்ளது.
இருக்கையின் நீளம் 692 மிமீ மற்றும் 5.3 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு பெற்று, 106 கிலோ எடை கொண்டது. முன்பக்கத்தில் 130 மிமீ டிரம் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பெற்றுள்ளது. முதன்முறையாக 110சிசி ஸ்கூட்டரில் இந்தியாவில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்ற மாடல் என்ற பெருமையை மட்டுமல்லாமல் கீலெஸ் ரிமோட் கண்ட்ரோல் வசதியை பெற்றுள்ளது. டீயூப்லெஸ் டயர் கொண்டுள்ள ஆக்டிவா 6G முன்புறத்தில் 90/90-12 54J மற்றும் பின்புறத்தில் 90/100-10 53J டயர் உள்ளது.
STD, DLX மற்றும் H-Smart என மூன்று விதமான வேரியண்டினை பெறும் நிலையில் STD மாடல் ஹாலஜென் விளக்கும், DLX மற்றும் H-Smart என இரண்டும் எல்இடி விளக்குகளை பெறுகின்றது.
சைலண்ட் ஸ்டார்ட் சிஸ்டத்துடன் H-ஸ்மார்ட் கீ பெற்ற ஸ்கூட்டரில் சாவி இல்லாத செயல்பாடுகளை வழங்குகின்றது. இதனால், ஸ்டார்ட் செய்ய சைடு லாக் அல்லது திறக்க உதவுதல், இருக்கைக்கு அடியில் உள்ள சேமிப்பை பயன்படுத்த மற்றும் முன்புறத்தில் உள்ள சுவிட்சை பயன்படுத்தி எரிபொருள் நிரப்ப மூடியைத் திறப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளைச் செய்யலாம். பார்க்கிங்கில் உள்ள ஸ்கூட்டரை கண்டறியவும் இதனை பயன்படுத்தலாம். மேலும், ஸ்கூட்டர் திருட்டினை முற்றிலும் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- ACTIVA STD Rs.79,955
- ACTIVA DLX Rs.82,455
- ACTIVA H-SMART Rs.85,955
(Ex-showroom)
ஹோண்டா ஆக்டிவா 110 நுட்பவிரங்கள்
என்ஜின் | |
வகை | ஏர் கூல்டு, 4 stroke |
Bore & Stroke | 47 x 63.121 mm |
Displacement (cc) | 109.51 cc |
Compression ratio | 10.0:1 |
அதிகபட்ச பவர் | 7.8 hp (5.77 Kw) at 8,000 rpm |
அதிகபட்ச டார்க் | 8.9Nm @ 5,500rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | அண்டர் போன் |
டிரான்ஸ்மிஷன் | ஆட்டோமேட்டிக் |
கிளட்ச் | டிரை டைப் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | அட்ஜெஸ்டபிள் காயில் ஸ்பிரிங் |
பிரேக் | |
முன்புறம் | டிரம் 130 mm |
பின்புறம் | டிரம் 130 mm (with CBS) |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய்/SMW |
முன்புற டயர் | 90/90-12 54J ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 90/100-12 53J ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V-3.0Ah MF பேட்டரி |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப்/கிக் |
பரிமாணங்கள் | |
நீளம் | 1833 mm |
அகலம் | 697 mm |
உயரம் | 1156 mm |
வீல்பேஸ் | 1260 mm |
இருக்கை உயரம் | 770 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 162 mm |
எரிபொருள் கொள்ளளவு | 5.3 litres |
எடை (Kerb) | 105 kg (Smart) – 106 kg (DLX,STD) |
ஹோண்டா ஆக்டிவா 110 நிறங்கள்
ப்ளூ மெட்டாலிக், சைரன் ப்ளூ, பிளாக், வெள்ளை, சிவப்பு மற்றும் கிரே என ஆறு நிறங்களை பெற்றதாக ஆக்டிவா 110 கிடைக்கின்றது.
2024 Honda Activa 110 on-Road Price Tamil Nadu
2024 ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
- ACTIVA STD Rs.99,653
- ACTIVA DLX Rs.1,02,432
- ACTIVA H-SMART Rs.1,06,591
(on-road Price in TamilNadu)
- ACTIVA STD Rs.88,235
- ACTIVA DLX Rs.90,990
- ACTIVA H-SMART Rs.95,431
(on-road Price in Pondicherry)
2024 Honda Activa rivals
2024 ஆக்டிவா ஸ்கூட்டருக்கு போட்டியாக ஜூபிடர், பிளெஷர் பிளஸ், ஜூம் 110, டியோ 110 உட்பட பல மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
Faqs About Honda Activa 110
ஹோண்டா ஆக்டிவா 110 என்ஜின் விபரம் ?
ஏர்-கூல்டு, 109.51cc, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 7.8hp மற்றும் 5,500rpm-ல் 9Nm டார்க் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
ஹோண்டா ஆக்டிவா மைலேஜ் எவ்வளவு ?
ஹோண்டா ஆக்டிவா 110 மைலேஜ் லிட்டருக்கு 48-52 கிமீ வரை வழங்கும்.
2024 Honda Activa 110 ஆன்-ரோடு விலை எவ்வளவு ?
ஹோண்டா ஆக்டிவா ஆன்-ரோடு விலை ரூ.99,653 முதல் ரூ.1.07 லட்சம் வரை ஆகும்.
ஹோண்டாவின் 2024 ஆக்டிவா போட்டியாளர்கள் ?
ஹோண்டா 2024 ஆக்டிவா மாடலுக்கு போட்டியாக டிவிஎஸ் ஜூபிடர், பிளெஷர் பிளஸ், டியோ 110 போன்றவை உள்ளன.
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்பொழுது?
எலெக்ட்ரிக் வெர்ஷனில் விற்பனைக்கு ஹோண்டா ஆக்டிவா 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.