GOAT FDFS: `Thank q #Thala #AK my anna' – வைரலாகும் வெங்கட்பிரபுவின் ட்வீட்

GOAT திரைப்படம் இன்று காலையில் வெளியாகியிருக்கிறது. விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மினாக்‌ஷி சௌத்ரி, ஸ்நேகா, லைலா எனப் பலரும் நடித்திருக்கின்றனர்.

GOAT திரைப்படத்தில் எக்கச்சக்க சர்ப்ரைஸ்கள் இருப்பதாக இயக்குநர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், படம் வெளியான உடனேயே யார் யார் கேமியோ செய்திருக்கின்றனர்? சிவகார்த்திகேயன் வருகிறாரா, ஏ.ஐயில் விஜயகாந்த் எப்படியிருக்கிறார், தோனி இருக்கிறாரா எனப் பல கேள்விகளுக்கும் விடையறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

படம் வெளியாகவுள்ள நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு வெங்கட் பிரபு ஒரு ட்வீடை பதிவிட்டார்.

“தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் பார்ப்பதற்கு முன்னர் நீங்கள் எந்த திரைப்படத்தையும் பார்க்கத் தேவையில்லை. சந்தோஷமா வந்து பாருங்க!! நம்ம தளபதியை கொண்டாடுவோம். இன்னும் 3 மணி நேரத்தில்” எனப் பதிவிட்டிருந்தார்.

அதற்கு சற்றுமுன் விஜய் மற்றும் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்தார். அதில், “விஜய் அண்ணாவுக்கு முதன்முதலாக வாழ்த்து சொன்ன #தல #ஏகே என் அண்ணாவுக்கு நன்றி. நான், GOAT குழு, வி லவ் யூ❤️” என எழுதியிருந்தார். இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.