iPhone 15 Pro Max… ரிலையன்ஸ் டிஜிட்டலில் அசத்தல் ஆஃபர்… மிஸ் பண்ணாதீங்க

கடந்த ஆண்டு, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் போன் இந்தியாவில் ரூ. 1,59,900 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், iPhone 15 Pro Max தற்போது ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ.1,37,990க்கு கிடைக்கிறது. அதாவது ரிலையன்ஸ் டிஜிட்டல் இந்த தொலைபேசியில் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த ஆஃபர் 256ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய பிளாக் டைட்டானியம் கலர் மாடலுக்கானது.

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் போனிற்கு கிடைக்கும் வங்கி தள்ளுபடிகள்

மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடியைத் தவிர, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டினை பயன்படுத்தி ஐபோன் வாங்கும் போது iPhone 15 Pro மேக்ஸ் போனிற்கு ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கிறது. இதனால் இதன் விலை ரூ.1,32,990 ஆக குறையும். உங்களுக்கு EMI வசதி கிடைத்தால், வங்கி அட்டையை பயன்படுத்தி வாங்கும் போது, இன்னும் அதிக தள்ளுபடியைப் பெறலாம். இது ஒரு சிறந்த வாய்ப்பு. ஐபோன் இந்த சலுகை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே வாய்ப்பினை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளவும். எனவே நீங்கள் iPhone 15 Pro Max போனை வாங்க விரும்பினால், தாமதிக்காமல் உடனே வாங்கவும், ஏனெனில் இந்த சலுகை எந்த நேரத்திலும் திரும்ப பெறப்படலாம்.

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்போனின் சிறப்பு அம்சங்கள்

iPhone 15 Pro Max போனில் 2796 x 1290 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்ட, 6.7 இன்ச் Super Retina XDR OLED டிஸ்ப்ளே உள்ளது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸில், சிறந்த செயல் திறன் மிக்க, ஆப்பிளின் ஏ17 ப்ரோ சிப் உள்ளது. இதன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் IP68 நீர்-எதிர்ப்பு மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. iPhone 15 Pro Max ஸ்மார்ட்போனில் 4,441mAh பேட்டரி உள்ளது. இது 20W வயர்டு மற்றும் 7.5W வயர்லெஸ் சார்ஜர் உடன் கிடைக்கும்.

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் கேமிரா

ஐபோன் 15 ப்ரோ மாடலில் உங்கள் பாக்கெட்டில் ஏழு கேமராக்கள் இருப்பது போன்ற கேமரா அமைப்பு இருப்பதாக ஆப்பிள் கூறுகிறது. ஐபோன் 15 ப்ரோ மாடலில் 48 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இது குறைந்த வெளிச்சத்திலும் சிறந்த புகைப்படங்களை எடுக்கும் மற்றும் புகைப்படத்தில் புள்ளிகள் என்பதே இருக்காது. இந்த கேமராவில் குவிய நீளத்தை (24mm, 28mm, 35mm) மாற்றி 5x ஆப்டிகல் ஜூம் வரை செல்லலாம். இதில் 4K60 ProRes வீடியோவையும் பதிவு செய்யலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.