இரத்த மாற்ற செயற்பாட்டின் போது இரத்தத்தில் தொற்றக்கூடிய நோய்க்கிருமிகள் இல்லை என்பதற்கு உயர்தரத்திலான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்துவதாக தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்தார்.
உலக இரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் (04) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மலேரியா, வயிற்றுப்போக்கு, கல்லீரல் அழற்சி (ஹெபடைடிஸ்) பி, கல்லீரல் அழற்சி சி மற்றும் எச். ஐ. வி எயிட்ஸ் போன்ற ஐந்து நோய்களினால் ஏற்படக் கூடிய நிலையைத் தவிர்ப்பதற்காக அதிவிசேட உயர் தொழில்நுட்பத்துடன் பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
குருதிக் கொடையாளரின் நடத்தை முறை மற்றும் அவர் குறித்த நோய்த்தாக்கங்களின் அவதானம் உள்ளதா என விசேட ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும், தேசிய குருதி மாற்று சேவைப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இவ்வுலகில் பயன்படுத்தப்படும் முன்னேற்றமான பொறிமுறைகள் ஒவ்வொன்றும் , விசுவாசமான முறைகள் என்றும் சம்பந்தப்பட்ட நாடுகளில் தொற்றுநிலைகள் இதற்கு செல்வாக்குச் செலுத்துவதாகவும், ஏதேனும் நாடொன்றில் எச். ஐ.வி எயிட்ஸ் 4%, 5% வீதத்தில் காணப்படுவதாயின் தன்னார்வக் கொடையாளரின் இரத்தத்தைப் பெற்றுக் கொள்ளும் போது ஏதேனும் அவதானம் காணப்படுவதாகவும் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெளிவுபடுத்தினார்.