தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அசையும் அசையாச் சொத்துகளின் முறைகேடான பாவனை தொடர்பாக ஆறு முறைப்பாடுகளும் , அரச அலுவலர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் தொடர்பாக மூன்று முறைப்பாடுகளும், அரச உத்தியோகத்தர்களது இடமாற்றம், பதவி உயர்வு, பரீட்சை நடாத்துதல், மற்றும் சேவை நீடிப்பு போன்றவை தொடர்பாக ஏழு முறைப்பாடுகளும், சட்டவிரோத சுவரொட்டிகள், பாதாதைகள் காட்சிப்படுத்தல் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் தொடர்பாக பத்து முறைப்பாடுகளும், பொருட்கள் விதியோகித்தல், அன்பளிப்பு வழங்குதல், திறப்பு விழா நடாத்தல் ,காணி பகிர்ந்தளித்தல் தொடர்பாக எழு முறைப்பாடும் சட்ட விரோத கூட்டங்கங்கள், தேர்தல் தொடர்பான ஊர்வலம் மற்றும் சட்டவிரோத அலுவலகங்களை நடாத்துதல் தொடர்பாக இரு முறைப்பாடும், மேலும் வேறுவகை முறைப்பாடுகளும் ஒன்றும் என மொத்தம் 36 பதிவாகியுள்ளன.
இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதி மீறல் அடிப்படையில் சாதாரண தரமுடையவை எனவும், இது தொடர்பாக 25 முறைப்பாடுகள் இதுவரை முடிவுருத்தப்பட்டுள்ளதாக தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.