சென்னையில் முதலீடு: பிஎன்ஒய் மெலன் வங்கிக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு @ சிகாகோ

சென்னை: உலகின் மிகப்பெரிய வங்கியான பிஎன்ஓய் மெலன் (BNY MELLON)வங்கி அதிகாரிகளை சந்தித்து சென்னையில் சர்வதேச தரத்திலான பயிற்சி மையம் உள்ளிட்டவை அமைக்கும் வகையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. அத்துடன் முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பெரிய லட்சியத்தை கொண்டதாகும் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் பல்வறு முன்னெடுப்புகள் உலகளாவிய நிறுவனங்களின் கவனங்களை வெகுவாக ஈர்த்திருப்பதால் தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும தகவல் தொழில்நுட்பம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் மின்னணுவியல் புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் சிறப்பான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. நாளைய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இளைஞர்களுக்கு திறன்களை வளர்க்கும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தை அரசு தொடங்கி பயிற்சியளித்து வருகிறது.

படித்த திறன்மிகு இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் முதல்வர் மு.கஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தில் சிகாகோவில் பிஎன்ஒய் மெலன் (BNY MELLON) வங்கியின் உயர் அலுவலர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து தமிழகத்தில் புதிய முதலீடுகள் மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். இந்த பிஎன்ஒய் மெலன் வங்கி உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும். இவ்வங்கி நி பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டதாகும்.

நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த வங்கி இந்தியாவிலும் பல கிளைகள் உள்ளன. செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் தமிழக அரசுடன் இணைந்து வங்கி சேவைகளை மேம்படுத்தவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிஎன்ஒய் மெலன் வங்கி தனது 6 முக்கிய மையங்களில் ஒன்றாக சென்னையை தேர்ந்தெடுத்துள்ளது. தமிழகத்தில் அதிகளவு கணினி பொறியியல் படித்த மாணவர்கள் உள்ளதால் சென்னையில் சர்வதேச தரத்தில் பயிற்சி மையம் அமைக்கவும், தரவுகளை பகுப்பாய்வு செய்யவும் மென்பொருள் மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பிஎன்ஒய் மெலன் வங்கியின் துணைத்தலைவர் செந்தில்குமார், செயற்கை நுண்ணறிவு பிரிவு தலைவர் சர்தக் பட்நாயக், தொழில்துறை செயலர் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் உடன் இருந்தனர், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அரசு கோப்புகளுக்கு கையெழுத்து! இதற்கிடையில் நேற்று முன்தினம் அமெரிக்காவில் இருந்த படியே இ-ஆபீஸ் வழியாக அரசு கோப்புகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவற்றில் கையெழுத்திட்டார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிகள் உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும் அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் மின் அலுவலகம் வழியே பணி தொடர்கிறது,” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.