YouTube இன் முகம் கண்டறிதல் மற்றும் செயற்கை-பாடல் கண்டறிதல் கருவிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும். கிரியேட்டர்கள் தங்கள் உள்ளடக்கத்தை டீப்ஃபேக் (Deepfake) பிரசச்னையில் இருந்து பாதுகாக்க உதவும் கருவிகளை YouTube அறிவித்துள்ளது.
ஒரு நபரின் குரல் அல்லது முகத்தைப் பயன்படுத்தி AI-உருவாக்கிய உள்ளடக்கத்தைக் கண்டறியும் புதிய கருவிகளை யூடியூப் அறிமுகம் செய்திருக்கிறது. AI-உருவாக்கிய முகம் அல்லது குரலைப் பயன்படுத்தும் உள்ளடக்கத்தை அடையாளம் காண முகத்தைக் கண்டறியும் கருவி உதவும். இதேபோல், செயற்கை பாடும் அடையாள தொழில்நுட்பமானது, AI-உருவாக்கிய பாடும் குரல்களைப் பயன்படுத்தும் உள்ளடக்கத்தைக் கண்டறிய உதவும்.
டீப்ஃபேக்
AI-உருவாக்கிய டீப்ஃபேக் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதை YouTube கட்டுப்படுத்த முடியும் என்பது பலருக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. இவை யூடியூப்பின் வரவிருக்கும் அம்சங்கள் என்றாலும், பலருக்கும் போலியை கண்டறிய முடியும் என்பதால், மோசடி செய்பவர்களுக்கு இனி கஷ்டகாலம் தான்.
முகம் கண்டறிதல் மற்றும் செயற்கையாகப் பாடும் அடையாளங்காட்டி, டீப்ஃபேக் வீடியோவில் யாருடைய முகத்தையும் குரலையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் படைப்பாளிகளுக்கு அதிக சுதந்திரம் கிடைக்கும். கடந்த காலங்களில், விசித்திரமான வேடிக்கையான காட்சிகளில் பிரபலங்களின் செயற்கை குரல்களைப் பயன்படுத்துவதை பார்த்திருக்கிறோம்.
அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், மறைந்த பிரபல தலைவர்களின் குரலில், அவர்கள் மக்களிடம் வாக்கு கேட்டதை நினைவுபடுத்தி பார்க்கலாம்.
யூடியூப் சேனல்கள்
இது யூடியூப் தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும். நூற்றுக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் உள்ளடக்கத்தை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தயாரிக்கின்றன. யூடியூப் குழுவால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை அடையாளக் கருவி மற்றும், இப்போது உருவாக்கப்பட்டு வரும் முகத்தை கண்டறியும் கருவி இரண்டுமே உள்ளடகத்தை பாதுகாக்கும்.
இந்த கருவிகள், யூடியூப் பிளாட்ஃபார்மில் தங்கள் உள்ளடக்கம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை சிறந்த கட்டுப்பாட்டுடன் படைப்பாளர்களுக்கு வழங்குவதற்கான ஒரு முயற்சி என்று யூடியூப் துணைத் தலைவர், அம்ஜத் ஹனிஃப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வலைப்பதிவு இடுகை வெளியிட்ட யூடியூப் துணைத் தலைவர், அம்ஜத் ஹனிஃப், AI மாதிரியைப் பயிற்றுவிப்பதற்கான தளத்திலிருந்து எந்தவொரு படைப்பாளரின் உள்ளடக்கத்தையும் அகற்றுவது YouTube இன் சேவை விதிமுறைகளை நேரடியாக மீறுவதாகும். என்றாலும்கூட, AI மாதிரி பயிற்சிக்காக மூன்றாம் தரப்பினர் தங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்த அனுமதிக்க படைப்பாளர்களுக்கு அதிகாரம் இருக்கும் என்று தெரிவித்தார்.
AI-உருவாக்கிய உள்ளடக்கம் இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும். AI உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்த எல்லா இடங்களிலும் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.