புதுடெல்லி: கையில் மகளுடன் ஸோமாட்டோ டெலிவரி பணியை செய்து வரும் சோனுவை ஸ்டார்பக்ஸ் மேலாளர் தேவேந்திர மெஹ்ரா வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதுகுறித்த அவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது: புதுடெல்லி கான் மார்க்கெட் பகுதியில் உள்ள எங்கள் ஸ்டார்பக்ஸ் கடையின் ஆர்டரை எடுக்க சோனு என்ற ஸோமாட்டோ டெலிவரி பாய் தனது இரண்டு வயது மகளுடன் வந்திருந்தார். அவரை விசாரித்தபோதுதான் அவர் ஒரு சிங்கிள் பேரண்ட் என்பது தெரியவந்தது.
ஒரு கையில் குழந்தை மறுகையில் டெலிவரி பார்சல்என மகளின் எதிர்கால வாழ்கைக்காக போராடும் சோனுவின் போராட்டம் மற்றவர்களுக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. அப்பாவும், மகளும் நலமாக வாழ எங்களின் இதயப்பூர்வமான வாழ்த்துகள். இவ்வாறு தேவேந்திர மெஹ்ரா பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் பின்னுாட்டத்தில்ஒருவர், “சோனு போன்றவர்களின் கதைகள் இதயத்தை பாரமாக்குகின்றன. அப்பாவால் போராடி வளர்க்கும் அந்த மகளின்கல்விக்காக நிதி திரட்ட ஏற்பாடுசெய்வோம். அதில் முதல் பங்களிப்பு எனதாக இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸோமாட்டோ வெளியிட்ட பதிவில், “சோனுவைப்பற்றி இதயம் தொடும் கதையைபகிர்ந்ததற்கு நன்றி. அவர் வேலையில் காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் மனவலிமை ஆகியவற்றால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம்” என்று தெரிவித்துள்ளது.