சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இது ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்துக்கு கிழக்கே 280 கி.மீ தொலைவிலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென்கிழக்கே 230 கி.மீ தொலைவிலும் […]