பல நேரங்களில் செல்போன் அழைப்பில் பேசும்போது, மறு முனையில் இருப்பவர்கள் பேசுவது சரியாக கேட்காது. போன் அழைப்பின் போது, மறு முனையில் இருப்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என புரியாத அளவிற்கு இரைச்சல் சத்தம் கேட்கலாம். இது யாருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனை. இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் ஏற்படும் நிலையில் இந்தச் சிக்கலைச் சமாளிக்கக்கூடிய சில டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம்.
தொலைபேசியில் நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க் காரணமாக அழைப்பின் போது ஆடியோ தரம் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். சில நேரங்களில் தொலைபேசியின் நெட்வொர்க் சில இடங்களில் பலவீனமாக இருப்பதால், அழைப்புகளை மேற்கொள்ளும் போது குரல் சரியாக கேட்காமல் படுத்தலாம். இந்த சிக்கலை எவ்வாறு சரிசெய்வது என்பதை அறிந்து கொள்ளலாம்.
1. தொலைபேசியை ரீஸ்டார்ட் செய்வதால் பிரச்சனை தீரலாம் (Restart the phone)
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்யுங்கள். பல நேரங்களில் போனை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் சிறிய நெட்வொர்க் பிரச்சனைகள் சரியாகலாம்
2. விமானப் பயன்முறையை (Airplane mode) ஆன் மற்றும் ஆஃப் செய்யவும்
விமானப் பயன்முறையை சில வினாடிகள் ஆன் செய்து, பின் ஆஃப் செய்வதால் நெட்வொர்க் இணைப்பைப் புதுப்பிக்க முடியும்.
3. உங்கள் தொலைபேசியைப் புதுப்பிக்கவும் (Update your phone)
உங்கள் மொபைலில் சில மென்பொருள் (software) பிரச்சனைகள் இருக்கலாம் அதன் காரணமாக நெட்வொர்க் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே, உங்கள் மொபைலை சமீபத்திய மென்பொருள் பதிப்பிற்கு புதுப்பிக்கவும்.
4. நெட்வொர்க் செட்டிங்குகளை மீட்டமைத்தல் (Reset network settings)
உங்கள் தொலைபேசியின் அமைப்புகளுக்குச் சென்று நெட்வொர்க் அமைப்புகளை மீட்டமைப்பது பிரச்சனைக்கு தீர்வாக அமையலாம்.
5. நெட்வொர்க் சிக்னலை சரிபார்க்கவும் (Check the network signal)
வேறு ஏதாவது ஒரு இடத்திற்கு சென்று அங்கு நெட்வொர்க் சிக்னல் நன்றாக இருக்கிறதா இல்லையா என்று பாருங்கள். சிக்னல் பலவீனமாக இருந்தால், சிக்னல் நன்றாக வரும் இடத்திற்குச் செல்லலாம் அல்லது ஜன்னல் அருகே செல்லலாம்.
6. சிம் கார்டைச் சரிபார்க்கவும் (Check the SIM card)
உங்கள் சிம் கார்டு சரியாகச் செருகப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும். சிம் கார்டு சரியாக பிட் ஆகாமல் இருந்தால், அதைச் சரியாகச் செருகவும். வேறு ஒரு ஃபோனில் சிம் கார்டைச் செருகி, வாய்ஸ் தரம் எப்படி இருக்கிறது என்பதை சோதிக்கலாம். சிம் கார்டில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்பதைச் இதன் மூலம் சரிபார்க்கலாம்.
7. தொலைபேசியை பேக்டரி ரீசெட் செய்து மீட்டமைக்கவும்
உங்கள் மொபைலை பேக்டரி ரீசெட் செய்து மீட்டமைக்கலாம். ஆனால் ஃபேக்டரி ரீசெட் செய்வதன் மூலம் உங்கள் போனில் சேமித்துள்ள அனைத்து டேட்டாவும் நீக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, பேக்டரி ரீசெட் செய்து மீட்டமைப்பைச் செய்வதற்கு முன் உங்கள் தரவைத் காப்புப் பிரதி எடுக்க மறக்காதீர்கள்.
8. நெட்வொர்க் வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும் (Contact the network provider)
அனைத்து வகையிலும் முயற்சி செய்தும் போனில் வாய்ஸ் சரியாக கேட்கவில்லை என்றால், உங்கள் நெட்வொர்க் வழங்குநரைத் தொடர்பு கொள்ள வேண்டும். உங்கள் பகுதியில் உள்ள நெட்வொர்க்கில் சிக்கல் இருக்கலாம்.