ஜெய்ப்பூர்: பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபர் சர்மா, 2022-ம் ஆண்டுஜூன் மாதம் முகம்மது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்தார்.
இதனிடையே ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரைச் சேர்ந்த டெய்லர் கன்னையா லால், நுபர் சர்மாவின் கருத்தை ஆதரித்து பதிவுகள் இட்டுவந்தார். இந்நிலையில், 2022 ஜூன் 28-ம்தேதி அவர் கொலைசெய்யப் பட்டார். இந்த வழக்கில் முகம்மது ரியாஸ் மற்றும் முகம்மது கவுஸ் ஆகியோருடன் கொலைக்கு சதி திட்டம் தீட்டியதாக முகம்மது ஜாவித் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இந்நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி ராஜஸ்தான் நீதிமன்றம் நேற்று முகம்மது ஜாவித்துக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.