சென்னை: நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி இருவரும் நீண்ட காலங்களாக காதலித்து வருகின்றனர். சமீபத்தில் இவர்களுக்கு திடீரென திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதன் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இருவருக்கும் திருமணம் நடந்ததாக கூறிய நிலையில், இருவரும் நிச்சயதார்த்தம் நடந்ததை உறுதிப்படுத்தினர். சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் இந்தியன் 2 படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
