மஹபொல புலமைப்பரிசில் தவணைக்கட்டணத்தை 7,500/- ரூபா வரைக்கும், மாணவர் உதவுதொகை தவணைக்கட்டணத்தை 6,500/- ரூபா வரைக்கும் 2025 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹபொல மற்றும் மாணவர் உதவுதொகை தவணைக் கட்டணங்கள் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை அதிகரிக்கப்படாமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நேற்று (09.09.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல மற்றும் மாணவர் உதவுதொகைகளை அதிகரித்தல்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹபொல மற்றும் மாணவர் உதவுதொகை தவணைக் கட்டணங்கள் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை அதிகரிக்கப்படவில்லை. குறித்த தவணைக்கட்டணத்தை திருத்தம் செய்வதற்கான தேவையை கல்வி அமைச்சர் மற்றும் வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை கவனத்தில் எடுத்திருந்தது. குறித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, மஹபொல புலமைப்பரிசில் தவணைக்கட்டணத்தை 7,500/- ரூபா வரைக்கும், மாணவர் உதவுதொகை தவணைக்கட்டணத்தை 6,500/- ரூபா வரைக்கும் 2025 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.