நிதிப் பொறுப்புகள்: பெண்களுக்கான முதலீட்டு உத்திகள்..!
இன்றைய தேதியில் நிதிப் பொறுப்புகள் என்பது ஆண்களை விட பெண்களுக்குதான் அதிகம் இருக்கிறது. வீட்டில் குடும்ப பட்ஜெட் தொடங்கி பிள்ளைகளின் கல்விக் கட்டணம், காப்பீடுகளின் பீரிமியம் கட்டுவது வரையிலான பொறுப்புகளை பெண்கள் தான் மேற்கொண்டு வருகிறார்கள்.
சில குடும்பங்களில் மியூச்சுவல் ஃபண்ட் சீரான முதலீடு, கடன் தவணைகளை கூட பெண்கள்தான் கவனித்து வருகிறார்கள்.
பெண்கள் முதலீடுகள் பற்றி மேலும் அறிந்து கொள்ளும்பட்சத்தில் குடும்ப பொருளாதாரம் மேலும் மேம்படும் எனலாம்.
அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாணயம் விகடன் இதழ் நடத்தி வருகிறது. அது போன்ற நிகழ்வு சென்னையில் நடக்கிறது.
நாணயம் விகடன் மற்றும் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘நிதிப் பொறுப்புகள்: பெண்களுக்கான முதலீட்டு உத்திகள்..!’ என்ற பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் செப்டம்பர் 14-ம், தேதி சனிக் கிழமை (மாலை 6.30 pm – 8.30 pm) அன்று நடைபெறுகிறது.
நிதி நிபுணர் திருமதி. சுந்தரி ஜகதீஷன் சிறப்புரையாற்றுகிறார்.
மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கோபிநாத் சங்கரன் (விற்பனை பிரிவு மூத்த மேலாளர்) பேசுகிறார்.
அனைவருக்கும் அனுமதி இலவசம். இது பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி என்றாலும் ஆண்களும் வரலாம். அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கேட்டு அறிந்த விஷயங்களை வீட்டில் உள்ள பெண்களுக்கு விளக்கிச் சொல்லலாம்.
பதிவு செய்ய: https://bit.ly/miraeassetMF