இன்னும் நான்கு நாள்களுக்கு, அதாவது செப்டம்பர் 14-ம் தேதி வரை மட்டுமே ஆதாரை இலவசமாக அப்டேட் செய்துக்கொள்ள முடியும்.
ஏன் ஆதாரை அப்டேட் செய்ய வேண்டும்?
நம்மில் பலரும் ஆதார் பெற்று பல ஆண்டுகள் ஆகியிருக்கும். இந்த ஆண்டுகளில் வீடு மாறியிருக்கலாம். குழந்தைகளுக்கு முகத்தோற்றம் மாறியிருக்கும். ஆனால் இதுவரை ஒரு முறை கூட இவற்றை ஆதாரில் அப்டேட் செய்திருக்க மாட்டோம். ஆனால் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும்.
பல ஆண்டுகளாக ஆதாரை அப்டேட் செய்யாமல் இருப்பவர்கள் அல்லது ஆதாரில் முகவரி மாற்றம் போன்றவற்றை செய்ய விரும்புவர்கள் வரும் செப்டம்பர் 14-ம் தேதி வரை இலவசமாக செய்துக்கொள்ளலாம்.
அப்டேட் செய்வதற்கான வழிமுறைகள்…
-
அந்த வலைதளத்தில் ‘login’ கொடுத்து, ஆதார் எண்ணையும், கேப்சாவை பதிவிட்டு கொள்ளவும்.
-
ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு வரும் OTP-ஐ நிரப்பவும்.
-
‘Document update’-ஐ கிளிக் செய்துக்கொள்ளவும்.
-
பின்னர் வரும் உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்கவும்.
-
கீழே இருக்கும் ‘verify’ பாக்ஸை ‘டிக்’ செய்துக்கொள்ளவும்.
-
இதன் பின்னர் வரும் பக்கத்தில், உங்களுக்கு தேவையான மற்றும் மாற்ற வேண்டிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
-
இந்த ஆவணங்கள் JPG, PNG அல்லது PDF வடிவில் 2 MB-க்குள் இருக்க வேண்டும்.
-
கடைசியாக, ஒருமுறை அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்துவிட்டு பதிவேற்றம் செய்துவிடவும்.
புகைப்படம், கைரேகை ஆகியவற்றை பதிய வேண்டும் என்றால் அருகில் இருக்கும் தபால் நிலையத்திலோ, இ-சேவை மையத்திலோ பதிந்துக்கொள்ளலாம். இதற்கு குறைந்தப்பட்சம் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY