புதுடெல்லி: ஆராய்ச்சி சூழல் அமைப்பில் உள்ள தடைகளை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற வேண்டும் என அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்ட அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதல் நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஆராய்ச்சி சூழல் அமைப்பில் உள்ள தடைகளை கண்டறிந்து அகற்றுவதன் அவசியத்தை பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் வலியுறுத்தி பேசினார். மேலும்,நாட்டில் நடக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான தகவல்களை எளிதாகக் கண்காணிக்ககூடிய டாஷ்போர்டை உருவாக்க வேண்டும் என்றார்.
பிரச்சினைகள் உலகளாவியதாக இருக்கலாம், ஆனால் அவற்றின் தீர்வுகள் இந்திய தேவைகளுக்கு ஏற்ப உள்ளூர் மயமாக்கப் பட வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நிலைப்பாடு. மேலும்,தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகளை கண்டுபிடிப் பதற்கான ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
சுற்றுச்சூழல் மாற்றத்துக்கான புதிய தீர்வுகள், மின்சார வாகனங் களுக்கான பேட்டரி பொருட்கள், ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரங்கள் போன்ற பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியை மேம்படுத்துவதன் அவசியம் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை மறுவடிவமைப்பு செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு வளங்களைப் பயன்படுத்துவதை அறிவியல் பூர்வமாக கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் இந்த கூட்டத்தில் வலியுறுத்தினார். இவ்வாறு பிரதமர் அலுவலகஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சி, மேம்பாட்டு திட்டத்தை மறுவடிவமைப்பு செய்வது குறித்துவலியுறுத்தப்பட்டது.