கிரேட்டர் நொய்டா,
நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் 3 நாள் (இன்றுடன் சேர்த்து) ரத்து செய்யப்பட்டது.
இதன் காரணமாக மைதானத்தில் சரியான வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மைதானத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக பி.சி.சி.ஐ 3 மைதானங்களை வழங்கியதாவு, நாங்கள்தான் (ஆப்கானிஸ்தான்) கிரேட்டர் நொய்டாவை தேர்வு செய்தோம் என ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் மேலாளர் மென்ஹாஜுதீன் ராஸ் கூறியுள்ளார்.
இது தொடபாக அவர் கூறியதாவது, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக பி.சி.சி.ஐ எங்களுக்கு கான்பூர், பெங்களூரு, கிரேட்டர் நொய்டா ஆகிய மூன்று மைதாங்களை ஒதுக்கியது. இதில் கிரேட்டர் நொய்டா மைதானத்தை நாங்கள்தான் தேர்வு செய்தோம்.
டெல்லி விமான நிலையத்திலிருந்து இரண்டு மணி நேர பயணத்தில் இருந்ததால், போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும் என்பதால் நாங்கள்தான் இந்த மைதானத்தை தேர்ந்தெடுத்தோம் என கூறினார்.