ரெட்ரோ ஸ்டைல், நவீன வசதிகளுடன் ஹீரோ டெஸ்டினி 125 அசத்துகின்றதா..?

125சிசி சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டெஸ்டினி 125 ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஒரு விற்பனை எண்ணிக்கை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்த நவீனத்துவமான வசதிகளுடன் கூடிய ரெட்ரோ ஸ்ட்டைல் அமைப்பு போன்றவை எல்லாம் கவர்ச்சிகரமாக அமைந்திருப்பது மிகப்பெரிய பக்கபலமாக அமைந்திருக்கின்றது .

குறிப்பாக 125சிசி சந்தையில் சுசூகி ஆக்செஸ் 125 அதிகப்படியான வரவேற்பினை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும் டிவிஎஸ் ஜூபிடர் 125, யமஹா ஃபேசினோ 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 போன்ற மாடல்கள் கடும் போட்டியை டெஸ்டினி 125க்கு ஏற்படுத்துகின்றது.

2024 ஹீரோ டெஸ்டினி 125 டிசைன்

புதுப்பிக்கப்பட்ட டிசைன் என்பது முற்றிலுமாக தோற்ற அமைப்பில் மாற்றப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக ரெட்ரோ சார்ந்த அம்சங்கள் பல்வேறு இடங்களில் பிரதிபலிக்கின்றது டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் அப்புறம் பகுதியிலும் சரி பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கின்ற பேனல்கள் மற்றும் ஹெட்லைட் அமைப்பு நவீனத்துவமாக மேம்படுத்தப்பட்டிருக்கின்றது. எல்இடி புராஜெக்டர் விளக்கு அனைத்து வேரியண்டுகளிலும் பெற்று இருப்பது ஒரு கவனிக்கத்தக்க அம்சமாகும்.

வெளிப்புறத்தில் பெட்ரோல் நிரப்பும் வசதி பின்புறத்தில் எல்இடி ஸ்டாப் விளக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் டர்ன் இன்டிகேட்டர் ஹாலஜன் பல்பு ஆக மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றது. பக்கவாட்டில் உள்ள பேனல்கள் நேர்த்தியாகவும் அதே நேரத்தில் ஐந்து விதமான நிறங்கள் கவர்ச்சிகரமாகவும் அமைந்திருக்கின்றது.

முன்புற அப்ரானில் இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் வசதி, யுஎஸ்பி போர்ட் உள்ளன. ஒரு முக்கிய பின்னடைவு என்னவென்றால் இந்த ஸ்கூட்டரில் வெறும் 19 லிட்டர் கொள்ளளவு கொண்ட இருக்கைக்கு அடிப்பகுதியிலான ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் போட்டியாளரான ஜூபிடர் 125 மிகச் சிறப்பான இட வசதியை வழங்குகின்றது.

2024 ஹீரோ டெஸ்டினி 125 பெர்ஃபாமென்ஸ்

டெஸ்டினி 125ல் பெர்ஃபார்மன்ஸ் சார்ந்த அம்சங்களில் எஞ்சின் செயல் திறன் முந்தைய மாடல் விட மேம்படுத்தப்பட்டு அதே நேரத்தில் சிறப்பான வகையில் சிவிடி கியர்பாக்ஸ் பாக்ஸ் ஆனது புதுப்பிக்கப்பட்டுள்ளதால் மைலேஜ் லிட்டருக்கு 59 கிலோமீட்டர் வரை கிடைக்கலாம் என இந்நிறுவனம் உறுதிப்படுத்துகின்றது.

டெஸ்டினி ஸ்கூட்டரில் 124.6cc ஏர்-கூல்டூ 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7000 rpm-யில் 9bhp பவர் மற்றும் 10.4Nm டார்க் ஆனது 5500 rpm-ல் வழங்குகின்றது.

சிறந்த முறையில் எஞ்சின் ட்யூன் செய்யப்பட்டு பல்வேறு மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மிகச்சிறந்த ரைடிங் அனுபவத்தை ஏற்படுத்த உதவுகின்றது. மைலேஜ் மிக சிறப்பாக வழங்கும் என நிறுவனம் குறிப்பிடப்படுவதனால் அதே நேரத்தில் ரைடிங்கிலும் இந்த மாடல் ஓரளவு நல்ல மைலேஜ் வழங்குவது உறுதியாக இருக்கின்றது எனவே லிட்டருக்கு 50 கிலோமீட்டர் முதல் 52 கிலோமீட்டர் வரை கிடைக்கலாம்.

new Hero desini 125

மேலும் சிறப்பான டாப் ஸ்பீட் அதிகபட்சமாக 85 முதல் 90 கிலோ மீட்டர் எட்டுகின்றது அந்த வேகத்தில் கூட பெரும்பாலும் வைப்ரேஷன் இல்லாமல் உள்ளது. அதிகப்படியான சிட்டி பயணங்கள் மற்றும் எப்பொழுதாவது நெடுஞ்சாலை பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற வகையிலும் இந்த இருக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது..

அதிர்வுகள் இல்லாத வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள எஞ்சின் மற்றும் இருக்கை அமைப்பில் சொகுசு தன்மையை வழங்குகிறது. ஹேண்டில் பார் பொசிஷன் ரைடிங் அமைப்பு அதிக சிரமம் இல்லாமல் ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு ஏற்ற வகையிலான அம்சம் ஆகியவற்றை மிக நேர்த்தியாக இம்முறை வடிவமைத்து இருக்கின்றது.

இரண்டு நபர்கள் மிக தாராளமாக அமர்ந்து செல்லும் வகையில் இருக்கையின் நீளம் கொடுக்கப்பட்டு இட வசதியும் சிறப்பாக உள்ளது .மேலும் இந்த மாடலில் பின்புறத்தில் கிராப் ரிலானது கொடுக்கப்படுகின்றது இது ஒரு கம்ஃபோர்ட்டான அம்சமாக பார்க்கப்படுகின்றது

இரு பக்க டயரிலும் 90/90-12 அங்குல வீல் கொடுத்திருப்பது நல்ல ஒரு அம்சமாகும் அதே நேரத்தில் சஸ்பென்ஷன் அமைப்பு முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்டு அனைத்துவித சாலைகளிலும் பயணிக்கும் வகையிலான ஒன்றாக அமைந்திருக்கின்றது.

டெஸ்டினி 125 வசதிகள்

ஆரம்ப நிலை VX மாடலில் வழக்கமன அனலாக் கிளஸ்ட்டர், முன்புறம் வழங்கப்பட்டுள்ள குரோம் பினிஷ் செய்யப்பட்ட இன்சர்ட், டிரம் பிரேக் உடன் வெள்ளை கருப்பு, சிவப்பு என மூன்று நிறங்கள் ஆனது வழங்கப்படுகின்றது டாப் ZX+ வேரியண்டில் வெள்ளை, கருப்பு நிறத்துடன் அதே க்ரோம் பாகம் காப்பர் ஃபினிஷ் செய்யப்பட்டு, டிஜிட்டல் கிளஸ்ட்டர், கால்/எஸ்எம்எஸ் அலர்ட், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், டிஸ்க் பிரேக், டைமண்ட் கட் அலாய் வீல், ஒளிரும் வகையிலான ஸ்டார்ட் சுவிட்ச், ஆட்டோ ரீசெட் இண்டிகேட்டர் ஆகியவற்றை கொண்டிருக்கின்றது. ZX வேரியண்டில் மெகன்டா (பிங்க்), ப்ளூ என இரு நிறங்களுடன் காப்பர் ஃபினிஷ் மட்டும் இல்லை.

destini 125 ride review

2024 ஹீரோ டெஸ்டினி 125 வாங்கலாமா?

போட்டியாளர்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்துகின்ற வகையிலான டிசைன் பெற்றிருப்பதுடன், அதிகப்படியன மைலேஜ் போன்றவை கவனிக்கதக்க அம்சங்களாக உள்ளது. ஹீரோ தனது ஆர்&டி அமைப்பினை முற்றிலும் மேம்படுத்தி நவீன தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் டெஸ்டினி 125 கொண்டிருக்கின்றது.

ஸ்போர்ட்டிவ் சார்ந்த டிசைனுக்கு வேறு மாடல்கள் உள்ளதால் குடும்பங்களுக்கு ஏற்றதாகவும், ரெட்ரோ டிசைனை விரும்புபவர்களுக்கு ஏற்றதாக உள்ளது. ஹீரோ டெஸ்டினி 125 கடும் போட்டியளர்களுக்கு மத்தியில் சிறப்பான வசதிகளை கொண்டிருக்கின்றது. ஸ்கூட்டரின் விலை தற்பொழுது அறிவிக்கப்படவில்லை, விலை சவாலாக அமைந்தாலும் விற்பனை எண்ணிக்கை சிறப்பாக அமையலாம்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.