IC814 Hijack: கடத்தப்பட்ட அந்த விமானத்தில் இருந்த `பெரும் புள்ளி’… கடத்தியவர்கள் `அறியாத’ கதை

கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி ஐசி 814 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், பயணிகள், பணியாளர்கள் உட்பட 176 பேருடன், நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்டது. ஆனால், அடுத்த 40 நிமிடங்களில் 5 தீவிரவாதிகளால் விமானம் கடத்தப்பட்டது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து கந்தஹார் விமானக் கடத்தல் ஐசி-814 என்ற புதிய வெப்தொடர் ஆகஸ்ட் 29-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியானது.

இந்த வெப்சீரிஸ் வெளியானதிலிருந்து பா.ஜ.க தலைவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ஐசி-814

அதனால், காந்தஹார் கடத்தல் சம்பவம் தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் அதிகம் தேடப்பட்டுவருகிறது. இந்த நிலையில்தான், சுவிட்சர்லாந்தின் அப்போதைய பெரும் பணக்காரரும், தொழிலதிபருமான ராபர்டோ ஜியோரியும் கடத்தப்பட்ட அந்த விமானத்தில் இருந்த தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இது தொடர்பாக வெளியான செய்தியில், சுவிட்சர்லாந்தின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவரான ராபர்டோ ஜியோரி(Roberto Giori), அன்றைய காலகட்டத்தில், உலகின் நாணய அச்சிடும் வணிகத்தில் 90 சதவிகிதத்துக்கும் மேல் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த, De La Rue என்ற நிறுவனத்தின் உரிமையாளர்.

இந்த நிறுவனம், அந்த காலக்கட்டத்தில் உலகில் 70-க்கும் மேற்பட்ட நாடுகளின் கரன்சி நோட்டுகளை அச்சடித்து விநியோகித்து வந்தது. இவர், தனது நண்பர் கிறிஸ்டினா கலாப்ரேசியுடன் நேபாளத்தில் விடுமுறையைக் கழித்துவிட்டு, காத்மாண்டுவிலிருந்து ஐசி 814 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த விமானம் கடத்தப்பட்டது. ஆனால், ராபர்டோ ஜியோரி யார் என்பது குறித்து தீவிரவாதிகள் உட்பட அந்த விமானத்தில் பயணித்த யாருக்கும் தெரியவில்லை.

ராபர்டோ ஜியோரி

அதே நேரம், கடத்தப்பட்ட விமானத்தில் ராபர்டோ ஜியோரியும் சிக்கியிருந்தது, இந்தியாவுக்கு சர்வதேச அழுத்தத்தை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகித்தது என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதைத் தொடர்ந்துதான் தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்ற இந்திய அரசு, மசூத் அசார், உமர் ஷேக் மற்றும் முஷ்தாக் அகமது சர்கார் ஆகிய மூன்று தீவிரவாதிகளை சிறையிலிருந்து விடுவித்தது என்கிறார்கள். அதன்பிறகே, விமானம் விடுவிக்கப்பட்டது. தற்போது இந்த தகவல் சமூகவலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.