இலங்கையின் நிதி துறையின் நிலைமை மற்றும் மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உப வேலைத் திட்டங்கள் இரண்டின் கீழ் 400 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு கடன் நிதி உதவியை ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு 2023-09-25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி 2023 டிசம்பர் மாதமளவில் 200 அமெரிக்க டாலர் கடனுதவி முதலாவது உப வேலைத் திட்டத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்டது.
அதன் இரண்டாவது உப வேலை திட்டத்தின் கீழ் 200 அமெரிக்க டாலர்கள் கடன் நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக 12 கொள்கை செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், தற்போது அச் செயற்பாடுகள் பல பூரணப்படுத்தப்பட்டு அல்லது அவை இறுதிக் கட்டத்தில் காணப்படுகின்றன.
அதன்படி இலங்கையின் நிதித் துறையின் நிலைப்பாடு மற்றும் மறு சீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாவது உப வேலை திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 200 மில்லியன் டாலர் கடன் நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக , நிதி, பொருளாதார ஸ்தீரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.