இந்தியாவின் மிகவும் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனமாக உருவாகிய ஏதெர் எனர்ஜி நிறுவனம் பொதுப்பங்கு வெளியிட்டிருக்கு தயாராகி உள்ளது. ரூபாய் 3,100 கோடியை பொதுப்பங்கு வெளியீடு மூலம் திரட்ட உள்ள நிதியை இந்நிறுவனம் எதிர்காலத்திற்கான எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மற்றும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிளாட்பாரம் உருவாக்குவதற்கு பயன்படுத்தவும் மகாராஷ்டிராவில் தொடங்க உள்ள தொழிற்சாலைக்கான முதலீட்டை மேற்கொள்ளவும் இந்த நிதியை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கின்றது.
ஏதெரின் முக்கிய முதலீட்டாளராக இந்தியாவின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உள்ள நிலையில் இந்நிறுவனம் எவ்விதமான பங்குகளையும் விற்க தயாராக இல்லை என தெரிகின்றது. இந்நிறுவனத்தின் மற்ற பங்குதாரர்களான சஞ்சய் பன்சால் உள்ளிட்ட பல்வேறு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் நிறுவனர்களான தருன் சஞ்சய் மேத்தா மற்றும் ஸ்வப்னில் பாபன்லால் ஜெயின் ஆகியோரின் 10 லட்சம் பங்குகள் என மொத்தமாக ஆஃப் ஃபார் சேல்(OFS) முறையில் சுமார் 22 லட்சம் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது.
DRHPன் படி, ஹீரோ மோட்டோகார்ப் 37.2% உடன் மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது. அதைத் தொடர்ந்து GIC (காலடியம் முதலீடு) மற்றும் NIIF முறையே 15.04% மற்றும் 10.29% ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பொதுப் பங்கு வெளியீடு அடுத்த மாதம் BSE, NSE என இரண்டிலும் பட்டியலிடப்படலாம். ஏதெர் எனர்ஜியின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் 2025 ஆம் ஆண்டில் இறுதி அல்லது 2026 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.