சென்னை: குரோம்பேட்டையில் பகுதியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளை நிறுவனமான எம்ஐடி கல்லூரிக்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 6ந்தேதியும் இந்த கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(எம்ஐடி) செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல பணிகள் தொடங்கி ய நிலையில், எம்ஐடி […]
