முதல் டி20 : டிராவிஸ் ஹெட் அரைசதம்: ஆஸ்திரேலியா 179 ரன்கள் குவிப்பு

சவுதாம்ப்டன்,

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது . டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 19 பந்தில் அரை சதமடித்தார். அவர் 23 பந்தில் 59 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு மேத்யூ ஷாட்-ஹெட் ஜோடி 86 ரன்களை சேர்த்தது. ஷாட் 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து கேப்டன் மிட்செல் மார்ஷ் ஒரு ரன்னிலும், ஸ்டோய்னிஸ் 10 ரன்னிலும் வெளியேறினர். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.இறுதியில், ஆஸ்திரேலியா அணி 19.3 ஓவரில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது . இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.