ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராகும் புதிய ஐபிஎல் அணி..!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங் உடன் புதிய ஐபிஎல் அணிகள் பயிற்சியாளர் பதவிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த அவரை அந்த அணி நிர்வாகம் இந்த ஆண்டு விடுவித்தது. இதனை தொடர்ந்து அவருடன் மற்ற ஐபிஎல் அணிகள் பயிற்சியாளராக நியமிக்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளன. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய ரிக்கி பாண்டிங்,  ஐபிஎல் தொடரில் மீண்டும் பயிற்சியாளராக பணியாற்ற விருப்பம் என தெரிவித்தார். இப்போது வரை அது குறித்து முடிவெடுக்கவில்லை என்றும், இரண்டு மூன்று ஆப்சன்கள் வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“ஐபிஎல் தொடரில் மீண்டும் பயிற்சியாளராக பணியாற்ற விருப்பம் உள்ளது. இப்போதைக்கு இரண்டு மூன்று ஆப்சன்கள் என் முன்னால் உள்ளன. ஆனால் அது குறித்து இன்னும் நான் முடிவெடுக்கவில்லை. ஐபிஎல் தொடரைப் பொறுவத்தை அது ஒரு உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு நிகரானது. ஒவ்வொருபோட்டியும் மிகப்பெரிய அழுத்தங்களுக்கு இடையே பிளேயர்கள் விளையாட வேண்டியிருக்கும். இளம் வீரர்கள் தங்களது திறமையை காண்பிக்க அதுஒரு நல்ல தளம். என்ன நடக்கிறது என்பதை உங்களைப் போலவே நானும் பொறுத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்த் தரமான கிரிக்கெட் பிளேயர் என கூறியிருக்கும் ரிக்கி பாண்டிங், அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் கூறியுள்ளார். விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக இந்திய அணிக்கும், சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்ததியிருக்கிறார். அவர் கொண்டு வந்த ஆக்ரோஷமான அணுகுமுறையே இப்போது பல வடிவங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மாறியிருக்கிறது என நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட் அணியும் விராட் கோலி கேப்டன்சிக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை பெற்றுள்ளது என்றும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

“களத்தில் சிறப்பாக செயல்படுவது மட்டுமே ஒரு அணியின் சிறந்த கேப்டனாக இருக்க முடியாது. வீரர்களுடன் எப்படியான அணுகுமுறை வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்தே அந்த அணியின் செயல்பாடுகள் 100 விழுக்காடு இருக்கும். அந்தவகையில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி அணுகுமுறை வெற்றி பெற்றிருக்கிறது. அவர் அணியில் இருக்கும் எல்லா பிளேயர்களுடனும் சோஷியலாக பழகுகிறார். அதுவே அவர் வழிநடத்தும் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது” என்றும் ரிக்கி பாண்டிங் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.