இன்றைய நிலையில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கும் வழியாகப் பங்குச் சந்தை முதன்மையாக இருக்கிறது. அதனால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் முதலீடு செய்ய ஆர்வமாக முன்வருகிறார்கள். ஆனால், பங்குச் சந்தையில் 5000-க்கும் மேலான பங்குகள் உள்ளன. ஆனால், இதில் எந்தப் பங்கை வாங்குவது, எந்தத் துறை சார்ந்த பங்கை வாங்குவது, என்ன விலையில் வாங்குவது, என்ன விலையில் விற்பது, எத்தனை பங்குகளை வாங்கலாம், இப்படி பல கேள்விகள் இருக்கின்றன.
முதலீட்டாளர்களின் இது போன்ற பல கேள்விகளுக்குப் பதில் கொடுக்கும் பணியை நாணயம் விகடன் தொடர்ந்து செய்துவருகிறது. அந்த வரிசையில், நாணயம் விகடன் முதலீட்டாளர்களை நேரடியாகச் சந்தித்து பங்குச் சந்தை முதலீடு தொடர்பாகப் பயிற்சி வகுப்புகளையும் எடுத்து வருகிறது.
தற்போது பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர் பங்குச் சந்தை நுணுக்கங்களை, பங்குச் சந்தை முதலீட்டில் லாபம் பார்ப்பதற்கான உத்திகளைக் கற்றுத்தர உள்ளார்.
நாணயம் விகடன் நடத்தும் `ஷேர் போர்ட்ஃபோலியோ: பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!’ என்கிற நேரடி பயிற்சி வகுப்பு சென்னையில் வருகிற அக்டோபர் மாதம் 5-ம் தேதி, சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில் பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர் தன்னுடைய 30 வருட கால பங்குச் சந்தை அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் கற்றுத்தர இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ரூ.5,000 மட்டுமே. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பங்குச் சந்தை முதலீட்டில் வெற்றிகரமாக லாபம் ஈட்ட இன்றே முன் பதிவு செய்யுங்கள்.
பங்குச் சந்தையில் பெரும்பாலானோர் முதலீடு செய்ய தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், நஷ்டம் அடையாமல் லாபகரமாக முதலீடு செய்பவர்கள் மிகவும் குறைவு. பங்குச் சந்தையைப் பற்றித் தெரியாமல், அதன் நுணுக்கங்கள், உத்திகள் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல் பங்குச் சந்தையில் லாபம் பார்க்க முடியாது. எனவே, இந்த அரிய வாய்ப்பைத் தவற விடாதீர்கள். பங்குச் சந்தை பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள உங்கள் இருக்கையை பதிவு செய்யுங்கள். முன் பதிவு செய்ய https://bit.ly/NVSharePortfolio என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்.