நடிகர் வடிவேலுவின் பிறந்தநாள் இன்று. நடிகர் என்பதைத் தாண்டி, பன்ச் டயலாக், மீம், ரீல்ஸ் என எந்த பார்மட் எடுத்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒருவராக வலம் வருபவர்.
நடிகர் என்பதைத் தாண்டி பாடகராகவும் பல படங்களில் கலக்கியிருக்கிறார் வடிவேலு. `சிங் இன் தி ரெயின்…’, `கொக்கர கொக்கரக்கோ சேவலே…’, `என்ன என்ன அயிட்டங்களோ’ என சினிமா பாடல்களை மீண்டும் வடிவேலு பாடக் கேட்பதில் இருக்கும் நகை-இன்பம் அலாதியானது.
சமீபமாக ஆன்லைனில் அவர், “தூரக் கிழக்கு கர ஓரம்தான்… தாழ பறந்துவரும் மேகம் தான்..” என சங்கமம் படத்தில் ஏரிக்கரை மேலிருந்து வடிவேலு பாடலைப் பாடிய காட்சி வைரலானது. கமல், விஜய், தனுஷ் என பல நடிகர்கள் பாடல்கள் பாடியிருந்தாலும் வடிவேலின் பாணி தனித்துவமானது. இளைய ராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் முதல் சந்தோஷ் நாராயணன் வரை பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார் வடிவேலு.
வடிவேலு பாடிய பாடல்களின் லிஸ்ட் இதோ…
எட்டனா இருந்தா எட்டூரு…
வாடி பொட்டபுள்ள வெளியே
பாலு பாலு நேபாளு
அப்பத்தா
போயா உன் மூஞ்சில
ஊத்திக்கடா மச்சான் ஜோரா
ராசா கண்ணு!
சந்தன மல்லிகையில்
உன்ன நான் லவ் பண்ணுறே
போடாங்கோ
காதல் பண்ண
ஓரொன்னு ஒன்னு
கட்டினா அவள கட்டணும்டா
குண்டக்க மண்டக்க
கண்ணமே
பணக்காரன்
நான் டீசன்டான ஆளு
இதில் மிஸ்ஸான பாடல்கள் மற்றும் உங்களது ஃபேவரைட் வடிவேலு பாடலைம் கமண்ட் பண்ணுங்க!