2024 ஜனவரி முதல் தற்போது வரையிலான 8 மாதங்களில், 784 இலங்கையர்கள் இஸ்ரேலில் செவிலியர் பராமரிப்பு தொழிலுக்காக சென்றுள்ளனர்;, மேலும் இஸ்ரேலில் வீட்டு செவிலியர் பராமரிப்பு சேவைக்கு தகுதி பெற்ற மேலும் 19 பெண்களுக்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் நிகழ்வு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று (12) இடம்பெற்றது.
இவர்கள் செப்டம்பர் 15ஆம் திகதி இஸ்ரேலுக்குப் புறப்பட உள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் இஸ்ரேலின் குஐடீயு நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, 1,618 இலங்கையர்கள் இஸ்ரேலில் செவிலியர் பராமரிப்பு வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்..
இலங்கையை உலகின் சிறந்த செவிலியர் பராமரிப்பு சேவை பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் நம்பிக்கை கொண்டுள்ளது, அதற்காக ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் செவிலியர் பராமரிப்பு வேலைகளுக்கு அதிகளவான இலங்கையர்களை உட்படுத்துவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.