சிஎஸ்கே அணிக்கு திரும்பும் ஆர்சிபி கேப்டன், ஐபிஎல் 2025 ஏலத்தில் டார்க்கெட் செய்ய முடிவு

ஐபிஎல் 2025 மெகா ஏலம் இந்தாண்டு இறுதி நவம்பர் அல்லது டிசம்பரில் நடக்க உள்ளது. இதனையொட்டி ஐபிஎல் அணிகள் எல்லாம் தக்க வைக்கும் பிளேயர்களை ஏறக்குறைய இறுதி செய்துவிட்டன. மேலும், டிரேடிங் பேச்சுவார்த்தைகளையும் தொடங்கிவிட்டன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த பிளேயர்களை எல்லாம் தக்க வைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் எழுந்துள்ள அதேநேரத்தில், ஏலத்தில் யாரை எல்லாம் எடுக்கலாம் என அந்த அணி முடிவு செய்திருக்கக்கூடிய தகவலும் வெளியாகியுள்ளது. அதில், ஆர்சிபி கேப்டன் பாப் டூ பிளசிஸ் ஏலத்துக்கு வந்தால் அவரை மீண்டும் சிஎஸ்கே அணிக்கு கொண்டு வரவும் அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. டூபிளசியை மீண்டும் சிஎஸ்கே அணி ஏன் டார்க்கெட் செய்யும் என்பதற்கான மூன்று முக்கியமான காரணங்களை பார்க்கலாம்.

சிஎஸ்கே பிளேயர்

டூ பிளசிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு குடும்பமாக இருந்தவர். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிஎஸ்கே அணியில் விளையாடிய அவர் கடந்த ஏலத்தில் தான் ஆர்சிபி அணி தட்டி தூக்கியது. அவர் இருக்கும் சிஎஸ்கேவின் ஓப்பனிங் பேட்டிங் வலிமையாக இருந்தது. ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து சூப்பரான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூபிளசிஸ், சிஎஸ்கே அணியின் அணுகுமுறைக்கு ஏற்றவாறு விளையாடும் பிளேயராகவும் இருந்தார். அவரை விட்டது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக இருந்த நிலையில், இந்த ஏலத்தில் அதனை சரி செய்ய முடிவெடுத்துள்ளது. 

கேப்டன்சி அனுபவம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நல்ல கேப்டன்சி அனுபவம் இருக்கக்கூடிய ஒரு பிளேயர் அணிக்கு தேவை. ஏனென்னறால் தோனி ஐபிஎல் 2025 தொடர் முழுவதும் விளையாடுவாரா? என்பது இன்னும் முடிவாகவில்லை. அதனால் அணிக்குள் கேப்டன்சி அனுபவம் இருக்கக்கூடிய ஒரு பிளேயர் இருந்தால் முக்கியமான தருணங்களில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஆலோசனை கொடுக்க உதவியாக இருக்கும் என சிஎஸ்கே எண்ணுகிறது. அதன்படி பார்க்கும்போது டூபிளசிஸ் கேப்டன்சியில் நிறைய அனுபவம் உள்ளவர். அதனால் அவரை அணிக்குள் கொண்டுவர ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யும்.

சிஎஸ்கே மந்திரா

சிஎஸ்கே அணி எப்போதும் சீனியர் மற்றும் ஜூனியர் பிளேயர்களின் கலவையை சரியாக பயன்படுத்தும். அந்தவகையில் இப்போது பிராவோ போன்ற பிளேயர்கள் அணியில் இல்லாததால் அந்த இடத்துக்கு டூபிளசிஸ் போன்ற சீனியர் பிளேயர்கள் இருந்தால் சரியாக இருக்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் எண்ணுகிறது. பேட்டிங், பீல்டிங், கேப்டன்சி என பன்முகமாக டூபிளசிஸ் செயல்படக்கூடியவர், ஏற்கனவே அணியில் இருந்தவர் என்ற காரணத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் நிச்சயம் இவரை டார்கெட் செய்யும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.