இந்தியாவின் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர், இந்தியாவின் முன்னணி சுகாதார நிறுவனமான GEM மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். சி. பழனிவேலு லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையில் முன்னோடியாக உள்ளவர். அறுவை சிகிச்சையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவரான் இவர், லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் உட்பட பல சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டவர். இரைப்பை குடல் அறுவை சிகிச்சை, குடலிறக்கம் சரிசெய்தல் மற்றும் உடல் பருமன் அறுவை சிகிச்சை போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்.
இவரின் தலைமையின் கீழ், GEM மருத்துவமனை குறைந்தபட்ச அணுகல் அறுவை சிகிச்சைக்கான சிறந்த மையமாக மாறியுள்ளது, பல விருதுகள் மற்றும் அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது. டாக்டர்.பழனிவேலு உடல்நலப் பாதுகாப்புக்கான அவரின் பங்களிப்புகளுக்காகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். மதிப்புமிக்க பத்ம பூஷன் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
அவர் தம் வாழ்வியல் அனுபவங்களை தம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
“என்னோட வாழ்க்கையில ஆரம்பமே எதுவுமே இல்லாமல் தான் ஆரம்பமானது. நான் சின்ன வயசுல இருக்கும்போதே மலேசியாவுக்கு கூலி வேலை செய்யுறதுக்காக போய்ட்டோம். என்னோட அப்பா மூணாம் வகுப்பு வரை படிச்சிருந்தாங்க. அம்மா ஸ்கூல் பக்கமே போனது இல்லை. அப்போலாம் கரண்டு கிடையாது. பகல்ல படிச்சாத்தான் உண்டு அதுனால ஒரு கையில புக்கை வச்சிக்கிட்டு இன்னொரு கையில மாட்டோட மூக்கினாங்கயிறை பிடிச்சிட்டே தான் படிப்பேன். எனக்கு காலேஜ் பீஸ் என்னோட கிராமத்துல உள்ள மக்கள் எல்லாரும் சேர்ந்து தான் கட்டுனாங்க.” என்கிறார். இவ்வாறு தன்னுடைய பல வாழ்வியல் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் டாக்டர் பழனிவேலு…