சென்னை: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தியேட்டரில் வசூல்வேட்டையாடிய வாழை ஓடிடியில் மாஸ் காட்டுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் நான்காவது படமான வாழை தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.
