iOS 16 இல் இயங்கும் ஐபோன்கள் மற்றும் iPadகளில் நெட்ஃப்ளிக்ஸ்க்கு தடா! காரணம் என்ன?

IOS 16 இல் இயங்கும் iPhoneகள் மற்றும் iPadகளுக்கான ஆதரவை Netflix விரைவில் நிறுத்தப் போகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.  Netflix செயலியின் அண்மை தகவலின்படி, Apple App Store இல் கிடைக்கும் iOS 16 இல் இயங்கும் அனைத்து சாதனங்களுக்கான ஆதரவைத் திரும்பப்பெறும். இந்த ஸ்ட்ரீமிங் இயங்குதளம் ஏற்கனவே அனைத்து பயனர்களுக்கும் இது போன்ற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் செயலியை புதுப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள அந்த செய்திகள், iOS 17 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பை நிறுவ வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 9To5 Mac ஆல் வெளியிடப்பட்ட நெட்ஃப்ளிக்ஸின் அறிக்கையில், பயனர்கள் iOS 16 இல் இயங்கும் ஐபோன்கள் மற்றும் iPadகளில் Netflix பயன்பாட்டைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், Netflix ஏற்கனவே இது தொடர்பான முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளதால், விரைவில் மாறுதல்கள் நடைபெறும். ஆனால், இது முதல் முறையாக நடக்கவில்லை. கடந்த காலத்தில், மூன்றாம் தலைமுறை ஆப்பிள் டிவியை ஆதரிப்பதை நெட்ஃபிக்ஸ் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த ஆப்பிள் சாதனங்களை Netflix ஆதரிக்காது என்பதைத் தெரிந்துக் கொள்வோம். iPhone 8, iPhone 8 Plus அல்லது iPhone Xஐப் பயன்படுத்துபவர்கள் இனி அதனை பயன்படுத்த முடியாது. இவற்றைத் தவிர, iPad 5 (2017 பதிப்பு) பயனர்கள் இனிமேல் நெட்ஃபிளிக்ஸை பயன்படுத்த முடியாது. இத்துடன், முதல் தலைமுறை iPad Pro பயனர்கள் இனிமேல் நெட்ஃப்ளிக்ஸ் செயலியை பயன்படுத்த முடியாது.  

எனவே, மேலே குறிப்பிடப்பட்ட சாதனங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்துபவராக இருந்தால், இந்த விஷயங்களைத் தெரிந்துக் கொள்வது நல்லது. நெட்ஃபிக்ஸ் மட்டுமல்ல, இனிமேல், கொஞ்சம் கொஞ்சமாக சில செயலிகள் சில பயன்பாடுகளை நீக்கலாம், இது தொடர்பான தகவல்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஆப்பிள் சமீபத்தில் iOS 18 உடன் அனுப்பப்படும் நான்கு சாதனங்கள் உட்பட iPhone 16 தொடரை வெளியிட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.