Thalapathy 69: `The Love for Thalapathy' – தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்

அ.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை படத்தைத் தயாரிக்கும் KVN நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

H.Vinoth

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருந்த ‘GOAT’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் விஜய்யின் அடுத்தப் படத்தை யார் இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. விஜய் ‘GOAT’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிதாக அரசியல் கட்சி ஒன்றையும் தொடங்கியிருந்தார்.

TVK| Vijay

கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தை முடித்துவிட்டு ஏற்கனவே ஒப்பந்தமாகியிருக்கும் இன்னொரு படத்தையும் முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடப் போகிறேன்.’ என கூறியிருந்தார்.

அதன்படி பார்த்தால் திரையுலகில் விஜய்யின் கடைசிப் படம் இதுதான். அதனால்தான் ரசிகர்கள் இந்தப் படத்தை கூடுதலாக எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

`சதுரங்க வேட்டை’, `தீரன் அதிகாரம் ஒன்று’, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கிய அ.வினோத்தான் இயக்கப் போகிறார் எனும் தகவல் சில மாதங்களாக ஓடிக்கொண்டிருந்தது.

h.vinoth

சில வாரங்களுக்கு முன்பு ஒரு விருது விழாவில் பேசிய வினோத்தும் விஜய் படத்தை இயக்குவதை உறுதி செய்தார். ‘இது எல்லாருக்கும் பிடிக்கும்படியான விஜய் படமாக இருக்கும்.’ என கூறியிருந்தார்.

Yash

தயாரிப்பு நிறுவனமே இப்போது படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.KVN என்கிற இந்த தயாரிப்பு நிறுவனம் இப்போது கன்னடத்தில் ‘டாக்சிக்’ என்ற யாஷ் நடிக்கும் படத்தைத் தயாரித்து வருகிறது. சீதாராமம், கல்கி, அனிமல் போன்ற படங்களின் விநியோக உரிமையை வாங்கி வெளியிடவும் செய்திருக்கிறது. அவர்கள் வெளியிட்ட வீடியோ இதோ!

தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ‘One last time’ என்று குறிப்பிட்டு விஜய் ரசிகர்களின் நெகிழ்ச்சியான கருத்துகளை தொகுத்து முக்கியமான அறிவிப்பு நாளை வெளியாகும் எனக் கூறியிருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.