காசநோய் தொற்றுக்குள்ளானோர் மத்தியில் தடுப்பு சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
காசநோய் தடுப்பு மற்றும் மார்பு நோய் தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பராமரிப்பு மாதிரியின் வினைத்திறனை அவதானிப்பதற்காக காலி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காக 387,280 அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதற்கு காசநோய் மற்றும் நுரையீரல் நோய் தொடர்பாக செயற்படும் சர்வதேச சங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்துடன் சுகாதார அமைச்சின் காசநோய் தடுப்பு மற்றும் மார்பு நோய் தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து மேற்குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கமைய, குறித்த ஆய்வை மேற்கொள்வதற்காக காசநோய் மற்றும் நுரையீரல் நோய் தொடர்பாக செயற்படும் சர்வதேச சங்கம், சுகாதார அமைச்சு மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நேற்று (13) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு
காசநோய் தொற்றுக்குள்ளானோர் மத்தியில் தடுப்பு சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்ளுதல்
இலங்கையில் இரண்டாவது முன்னிலையில் உள்ள தொற்றுநோய் காசநோய் என்பதுடன், தொற்றுநோய் காரணமாக ஏற்படும் மரணங்களுக்கு பிரதான காரணமாகவும் உள்ளது. 2021 ஆண்டில் காசநோய் தடுப்பு சிகிச்சை தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்களுக்கு ஏற்ற வகையில் இலங்கைக்கும் வழிகாட்டல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, காசநோய் தடுப்பு மற்றும் மார்பு நோய் தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பராமரிப்பு மாதிரியின் வினைத்திறனை அவதானிப்பதற்காக காலி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக 387,280 அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதற்கு காசநோய் மற்றும் நுரையீரல் நோய் தொடர்பாக செயற்படும் சர்வதேச சங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்துடன் சுகாதார அமைச்சின் காசநோய் தடுப்பு மற்றும் மார்பு நோய் தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து மேற்குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கமைய, குறித்த ஆய்வை மேற்கொள்வதற்காக காசநோய் மற்றும் நுரையீரல் நோய் தொடர்பாக செயற்படும் சர்வதேச சங்கம், சுகாதார அமைச்சு மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக கல்வி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.