மோட்டார் வாகன மற்றும் மோட்டார் பாவிக்கப்படாத பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ற்காலிக இறக்குமதி தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இலங்கை அந்நிய செலவாணி சந்தையின் அடிப்படையில் அதிகரித்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கையாகவும், ஒளடதங்கள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இருக்கும் அந்நியச் செலவாணி வழங்குதலை உறுதி செய்வதற்காக துரிதமாக அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி 2020 மார்ச் மாதம் தொடக்கம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக நேற்று (13) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
10. வாகன இறக்குமதிக்கான தற்காலிக தடையை நீக்குதல்
இலங்கை அந்நிய செலவாணி சந்தையின் அடிப்படையில் அதிகரித்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கையாகவும், ஒளடதங்கள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இருக்கும் அந்நியச் செலவாணி வழங்குதலை உறுதி செய்வதற்காக துரிதமாக அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி 2020 மார்ச் மாதம் தொடக்கம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடித்த கடன் வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உடன்பட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகளுடன் பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதனை கருத்திலெடுத்து, திருத்தம் செய்யப்பட்ட வகைப்படுத்தல் குறியீடு 304 இன் கீழ் வகைப்படுத்தப்படும் மோட்டார் வாகன மற்றும் மோட்டார் பாவிக்கப்படாத பொருட்களை இறக்குமதி செய்வதற்காக குறித்த தற்காலிக இறக்குமதி கைவிடுதலை பின்வரும் வகையில் நீக்குவதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- பொதுப் போக்குவரத்துக்காக பாவிக்கப்படும் வாகனங்கள், விஷேட கருமங்களுக்காக பாவிக்கப்படும் வாகனங்கள் மற்றும் ஏனைய மோட்டார் பாவிக்கப்படாத பொருட்களை 2024-10-01 திகதி தொடக்கம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குதல்.
- வர்த்தக ரீதியான அல்லது பொருட்களை ஏற்றிச்செல்லும் கருமங்களுக்காக பாவிக்கப்படும் வாகனங்கள் 2024-12-01 திகதி தொடக்கம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குதல்.
- தனிப்பட்ட பாவனைக்காக பாவிக்கப்படும் மோட்டார் வாகனங்கள் (கார், வேன், ஸ்போட் யூட்டிலிற்றி வாகனங்கள், பிக்கப் போன்றவை) 2025-02-01 திகதி தொடக்கம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குதல்.