இலங்கை கடற்படையின் சமூகப் பணிகளில் ஒன்றாக இரத்ததான முகாம் வடமாத்திய கடற்படை கட்டளையின் ஏற்பாட்டில் நேற்று(14) இடம்பெற்றது.
இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூகப் பணிகளில் ஒரு பகுதியாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் பிறியந்த பெரேரா வின் வழிகாட்டலின் கீழ் இந்த இரத்ததான முகாம் வடமத்திய கடற்படை பிராந்தியக் கட்டளைத் தளபதி ரியார் அட்மிரால் ஜெகத்குமாரவின் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
மன்னார் மாவட்ட இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்விரத்த தான முகாம் வட மத்திய பிராந்திய கடற்கரை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது வடமத்திய பிராந்தியத்துக்கான கடற்படை கட்டளை அதிகாரிகள் அதிகமானவர்கள் இரத்த தானம் செய்ததுடன், வட மத்திய பிராந்திய கடற்படை கட்டளை வைத்தியசாலையின் மருத்துவப் பணியாளர்கள் இவ்விரத்த தான முகாமை முன்னெடுப்பதற்கு மருத்துவ ஒத்துழைப்புகளை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.