காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் வெளியுறவு, ஊரக வளர்ச்சி, விவசாயம் மற்றும் கல்விக்கான நிலைக்குழு தலைவர் பதவி…

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18வது மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய நிலைக் குழுக்களின் தலைவர் பதவியை வழங்க பாஜக ஒப்புக்கொண்டுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 5வது முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் துறைகள் தொடர்பான மொத்தமுள்ள 24 நிலைக்குழுக்களில் நான்கு நிலைக் குழுக்களுக்கான தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.