புதிய சிம் கார்டு விதிகள்… பயனர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்

புதிய சிம் கார்டு விதிகள்: சிம் கார்டுகளை வாங்குவதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இப்போது ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் அல்லது வோடபோன்-ஐடியாவின் புதிய சிம் வாங்க பயனர்கள் அதிக டென்ஷன் எடுக்கத் தேவையில்லை. தொலைத்தொடர்புத் துறை (DoT) இப்போது விதிகளை முற்றிலும் பேப்பர்லெஸாக (paperless) மாற்றியுள்ளது. தொலைத்தொடர்பு துறையின் இந்த புதிய விதி பயனாளர்களின் தனிப்பட்ட ஆவணங்களை பயன்படுத்தி நடக்கும் மோசடியை தடுக்கும் வகையில் உள்ளது. 

நீங்கள் இப்போது புதிய சிம் கார்டை வாங்க விரும்பினால் அல்லது ஆபரேட்டரை மாற்றத் திட்டமிட்டிருந்தால், நீங்கள் இனி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. உங்கள் சிம் கார்டுக்குத் தேவையான ஆவணங்களை நீங்களே சரிபார்க்க முடியும். சிம்கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை தொலைத்தொடர்பு துறை மாற்றி, பயனர்களுக்கு புதிய சிம் கார்டை வாங்கும் செயல்முறையை DoT எளிதாக்கியுள்ளதான் பயனரின் ஆவணகள் தவறாக பயன்படுத்தப்படும் ஆபத்து நீங்கும்.

தொலைத்தொடர்புத் துறையின் இந்த முற்றிலும் டிஜிட்டல் செயல்முறை பயனர்களின் ஆவணங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும்.  அதே போன்று இனி யாருடைய பெயரிலும் போலி சிம்கள் வாங்கப்படுவதும் தடுக்கப்படும். 

தொலைத்தொடர்புத் துறை (DoT) சிம் கார்டுகளுக்கான புதிய விதி குறித்து அதிகாரப்பூர்வ X கணக்கில் இருந்து அறிவித்துள்ளது. மேலும், புதிய சிம் கார்டை வாங்கும் முன் சில விஷயங்களை மனதில் கொள்ளுமாறு பயனர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

சிம் கார்டின் புதிய விதி குறித்து, தொலைத்தொடர்புத் துறை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தனது பதிவில், பயனர்களுக்கான கே ஒய் சி நடைமுறையை எளிதாக்கும் முயற்சியாக, தொலைத்தொடர்பு சீர்திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது என்றும், இப்போது e-KYC (Know Your Customer) மற்றும் self KYC பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பதிவிட்டுள்ளது.

ஆதார் அடிப்படையிலான e-KYC மற்றும் Self-KYC என்றால் என்ன?

KYC நடைமுறையில் ஆதார் அடிப்படையிலான e-KYC, Self KYC மற்றும் OTP அடிப்படையிலான சேவை ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளும் வசதியை DoT அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய சிம் கார்டை வாங்க பயனர்கள் இனி ஆதார் அட்டையை மட்டுமே பயன்படுத்த முடியும். டெலிகாம் நிறுவனங்கள், பயனர்களின் ஆவணங்களுக்கு ஆதார் அடிப்படையிலான காகிதமில்லா சரிபார்ப்பு அம்சத்தைப் பயன்படுத்தும். இதற்கு ரூ.1 மட்டுமே (ஜிஎஸ்டியுடன்) செலவாகும்.

பயனர்கள் தங்கள் எண்ணை ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு மாற்றுவதற்கு கூட டெலிகாம் ஆபரேட்டர்களிடம் செல்ல வேண்டியதில்லை. பயனர்கள் இப்போது OTP அடிப்படையிலான சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். உங்கள் புகைப்பட நகல் அல்லது ஆவணம் எதையும் பகிராமல் புதிய சிம் கார்டை வாங்க முடியும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.