சென்னை: நடிகர் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த ஆண்டில் சூட்டிங் துவங்கப்பட்ட படம் விடாமுயற்சி. இந்த படத்தின் சூட்டிங் சில மாதங்கள் அசர்பைஜானில் நடத்தப்பட்ட நிலையில் சில மாதங்கள் இந்த படத்தின் சூட்டிங் முடங்கியது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கப்பட்டு தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது. படத்தின்
