Emmy Awards: 600 வைரக் கற்களுடன் மினுக்கும் ஆடை; எம்மி விருது விழாவில் கவனம் ஈர்த்த செலினா கோம்ஸ்

திரைப்படங்களுக்கான உயரிய விருதான ஆஸ்கர் வழங்கப்படுவதுபோல தொலைக்காட்சி மற்றும் ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கு மிக உயரிய விருதாக எம்மி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த விருதுகளின் சிறப்பம்சமே இதில் பிரைம் டைம் எம்மி, டே டைம் எம்மி, ஸ்போர்ட்ஸ் எம்மி தொடங்கி சர்வதேச எம்மி வரை பல்வேறு வகைகள் உண்டு. இந்த விருதினை இன்டர்நேஷனல் அகாடமி ஆஃப் டெலிவிஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான சர்வதேச எம்மி விருதுகள் விழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

செலினா கோம்ஸ்

ரெட் கார்பட் நிகழ்வில் பல பிரபலங்கள் விலை உயர்ந்த மிடுக்கான ஆடைகளை அணிந்து வந்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றனர். எம்மி விருதுகளில் ‘ஒன்லி மர்டர்ஸ் இன் தி பில்டிங்’ தொடரில் சிறப்பாக நடித்தற்காகச் சிறந்த நடிகைக்கான பிரிவில் நடிகை செலினா கோம்ஸ் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் விருது விழாவில் கலந்துகொண்ட அவரின் ஆடை பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அவர் அணிந்திருந்த ஆடையில் கிட்டத்தட்ட 600 வைரக் கற்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

கைகளாலேயே அந்த வைரக் கற்களை ஆடையில் பொருத்தி இருக்கின்றனர். ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான எரின் வால்ஷ் என்பவர்தான் இந்த ஆடையை வடிவமைத்திருக்கிறார். தற்போது செலினா கோம்ஸின் ஆடை இணையத்தில் வைரலாகி வருகிறது.

செலினா கோம்ஸ்

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர் செலினா கோம்ஸ். நடிகை, பாப் பாடகி, தயாரிப்பாளர், தொழிலதிபர் எனப் பன்முகத்தன்மை கொண்ட இவர் 400 மில்லியன் இன்ஸ்டா பாலோயர்ஸைக் கொண்ட முதல் பெண் பிரபலம் என்ற பெருமையையும் இவர் பெற்றிருக்கிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் 425 மில்லியன் பாலோயர்ஸை கொண்டிருக்கிறார். சமீபத்தில் அமெரிக்காவின் இளம் பெண் கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்கள், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.