ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கெளரவ கதாபாத்திரத்தில் நடிக்க விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருந்த ‘லால் சலாம்’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கிரிக்கெட் தொடர்பான இந்தக் கதையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியான போது ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தது. அந்த சமயத்தில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா விகடனுக்கு அளித்த நேர்காணலில், இப்படத்தின் படப்பிடிப்பின்போது ‘ஹார்ட் டிஸ்க்’ தொலைந்து போனதாக அதிர்ச்சியான தகவல் ஒன்றை வேதனையுடன் பகிர்ந்திருந்தார். தொலைந்த ஹார்ட் டிஸ்க்கை மீண்டும் படமாக்க அதிக செலவுகள் செய்யப்பட்டதாகவும், இதுபோன்ற பல்வேறு காரணங்களால் படத்தை நினைத்தபடி படத்தை எடுக்க முடியவில்லை என்று வருத்தத்துடன் பேசியிருந்தார்.
இந்நிலையில் தற்போது தொலைந்த ஹார்ட் டிஸ்க்கை மீட்கப்பட்டுள்ளதாக நேர்காணல் ஒன்றில் பேட்டியளித்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதுபற்றி பேசியிருக்கும் அவர், ‘லால் சலாம்’ படப் படப்பிடிப்பின்போது தொலைந்த ஹார்ட் டிஸ்க் மீட்டுள்ளதாகவும், இப்படத்தின் இயக்குநர் வெர்ஷன் விரைவில் ஓ.டி.டி-யில் வெளியாகும் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், முன்பு வெளியான ‘லால் சலாம்’ படத்தின் வெர்ஷனை காட்டிலும் இது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்றும் இதுதான் தான் எழுதிய, எடுக்க நினைத்த திரைப்படம் என்றும் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…