LIC: எல்.ஐ.சி., இன்ஃபோஸிஸ்-உடன் இணைந்து உருவாக்கும் அடுத்த தலைமுறைக்கான டிஜிட்டல் இயங்குதளம்

எல்.ஐ.சி. டிஜிட்டல் மாற்றத்திற்கான  DIVE (Digital Innovation and Value Enhancement)  என்னும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.

தனது டிஜிட்டல் இயங்குதளத்தை மேம்படுத்தி தனது வாடிக்கையாளர்கள், களப்பணியாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன்  எல்.ஐ.சி., DIVE எனும் இத்திட்டத்தை தொடங்கியுள்ளது.

அடுத்த தலைமுறைக்கான டிஜிட்டல் இயங்குதளத்தை கட்டமைத்து ஒருமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் காப்பீட்டுத் தீர்வுகளை வழங்கவும்  உயர்தர சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவும், வணிக மேற்பார்வை மற்றும் விற்பனைப் பிரதிநிதிகளுக்கான இயங்கு தளங்கள் மற்றும் ஊழியர்களுக்கான டிஜிட்டல் முன்-முனை இயங்குதளங்கள் போன்றவற்றை அமைக்கவும் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தை எல்.ஐ.சி. நியமித்துள்ளது.

அடுத்த தலைமுறை டிஜிட்டல் இயங்குதளம், நவீனம், சூழலுக்கேற்ப மாறுபடும் தன்மை, க்ளவுட்-தன்மை மற்றும் இயங்குதளம் மூலம் செயல்படும் கட்டமைப்பை கொண்டதாக இருக்கும். இதன் மூலம் புதுவகை தொழில் நுட்பம், புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பம்சங்களை உடனடியாக செயல்படுத்த முடியும். வாடிக்கையாளர் & விற்பனை செயலிகள், போர்டல் மற்றும் டிஜிட்டல் கிளை போன்ற உயர்தர வணிகச்செயலிகளை கட்டமைக்க இந்த இயங்குதளம் உதவியாக இருக்கும்.

எல்.ஐ.சி

“எல்.ஐ.சி.யை தொழில் நுட்பம் மூலம் ஆயுள் காப்பீட்டுத் தீர்வுகளை வழங்கும்  ஒரு நிறுவனமாக மாற்றுவதே எங்களுடைய நோக்கம்.  இன்ஃபோஸிஸ் உடனான இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலகத்தரமான டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் உயர்தரமான சேவையை எங்களது பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கும் அளிப்பதை ஆர்வமுடன் எதிர் நோக்குகிறோம்” என திரு.சித்தார்த்த மொஹந்தி, முதன்மை செயல் அதிகாரி & மேலாண்மை இயக்குனர் அவர்கள் கூறினார்.  

டிஜிட்டல் மாற்றத்திற்கான அவசியத்தை வலியுறுத்தி திரு.சித்தார்த்த மொஹந்தி, முதன்மை செயல் அதிகாரி & மேலாண்மை இயக்குனர் அவர்கள் மேலும்  கூறியதாவது “தற்பொழுது நாம் டிஜிட்டல் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விற்பனையின் போதும் மற்றும் அதன் பிறகும் வாடிக்கையாளர்களுடைய தேவைகள் உடனுக்குடன் தீர்க்கப்படவேண்டும். தொழில்நுட்பம், வாடிக்கையாளர்களைப் பற்றி ஆழ்ந்து அறிந்து கொள்ளவும் மற்றும் இந்தியாவின் மிகச்சிறந்த டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி மிகச்சிறந்த சேவைகளை அளிக்கவும் உதவுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.