வரும் அக்டோபர் 4ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய நிசான் மேக்னைட் எஸ்யூவி காரின் 2024 ஆண்டிற்கான மாடல் சிறிய அளவிலான முன்புற தோற்றம் மற்றும் பல்வேறு டிசைன் மாற்றங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கும் மற்றபடி, எவ்விதமான கூடுதலான மெக்கானிக்கல் மாற்றங்கள் இடம் பெற வாய்ப்பு இல்லை.
கடந்த சில ஆண்டுகளாக ஒற்றை மாடலை மட்டும் விற்பனை செய்து வந்த நிசான் இந்தியா நிறுவனம் தற்பொழுது எக்ஸ்ட்ரெயில் மாடலை அறிமுகம் செய்து இருந்தது. அதனை தொடர்ந்து தற்பொழுது மேம்படுத்தப்பட்ட புதிய மேக்னைட் மாடல் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
என்ஜின் ஆப்ஷனில் எந்தவொரு மாற்றங்களும் இல்லை 1.0 லிட்டர் B4D NA பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கும் மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஏஎம்டி அல்லது EZ-Shift கியர்பாக்ஸ் உள்ளது.
அடுத்து, 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.
தோற்ற அமைப்பின் முன்புறத்தில் உள்ள பம்பர் மற்றும் எல்இடி விளக்குகள் போன்றவை எல்லாம் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம் கூடுதலாக 6 ஏர் பேக்குகள் அடிப்படையாகவே சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இன்டீரியரில் சிறிய அளவிலான நிறங்கள் மாற்றப்பட்டு மற்றபடி தற்பொழுது உள்ள இன்டீரியர் வசதிகளை தொடர்ந்து வழங்கப்பட வாய்ப்புள்ளது.