இம்பால் இன்று மணிப்பூரில் பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. பா.ஜனதா ஆட்சி நடைபெறும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குகி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்து 200-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். வீடுகளை விட்டு ஆயிரக்கணக்கானோர் வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். சிறிது சிறிதாக மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. அங்கு டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் […]