ஜிமெயில் கணக்கு இருக்கா… இதை செய்யலைன்னா டிலீட் ஆகலாம்

கூகுளின் ஜிமெயிலைப் பயன்படுத்துபவர்களுக்கு மிக முக்கிய செய்தி. ஏனெனில் செயலற்ற கணக்குக் கொள்கை Google ஆல் செயல்படுத்தப்படுகிறது. கூகுளின் புதிய கொள்கை 20 செப்டம்பர் 2024 முதல் அமலுக்கு வருகிறது. இந்தக் கொள்கையின் அடிப்படையில், லட்சக்கணக்கான ஜிமெயில் கணக்குகள் மூடப்படும். கூகுள் டிரைவ் மற்றும் கூகுள் புகைப்படங்களைப் பயன்படுத்தும் பயனர்கள் இதனால் சிக்கலைச் சந்திக்க நேரிடும்.

நீண்ட நாட்களாக செயல்படாமல் இருக்கும் ஜிமெயில் கணக்குகளை டிலீட் செய்ய கூகுள் முடிவெடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த கூகுள் கணக்குகள் டிலீட் செய்யப்படும் என்ற சூழ்நிலையில், நீண்ட காலமாக ஆக்டிவாக இல்லாத ஜிமெயில்  கணக்கை வைத்திருக்கும் பயனர்கள் தங்கள் தரவை பாதுகாத்து வைத்துக் கொள்ள ஏதுவாக, கூகுள் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

செயல்படாத உங்கள் கணக்கில் இருக்கும் தரவுகளை பாதுகாக்கும் முறை

1. முதலில் உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைய வேண்டும்.

2. இதற்குப் பிறகு நீங்கள் Google Takeout பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

3. அதன் பிறகு, சேமிக்கும் நினைக்கும் தரவைச் தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தரவு அல்லது முழுமையான தரவுகளை சேமிப்பதற்கான ஆப்ஷனை பெறுவீர்கள்

5. உங்களுக்கு ஏற்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து தரவுகளை சேமித்துக் கொள்ளலாம்.

செயலில் இல்லாத கூகுள் கணக்குகள் ஏன் மூடப்படுகின்றன?

நீண்ட நாட்களாக செயல்படாமல் இருக்கும் ஜிமெயில் கணக்குகள் மூலம் ஹேக்கிங் செய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம் என கூகுள் கூறுகிறது. மேலும், செயல்படாத கணக்குகளால் கூகுளின் சர்வர் ஸ்டோரேஜ் அதிகரிக்கிறது என்று நிறுவனம் கூறுகிறது. செயல்படாத ஜிமெயில் கணக்குகளை மூடுவதற்கு இதுவே காரணம். மூடப்படும் கணக்குகளில் தனிப்பட்ட ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோஸ் கணக்குகளும் அடங்கும் என்று கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது. கூகுளின் புதிய விதி பள்ளிகள் மற்றும் வணிக கணக்குகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் செயலற்ற கணக்குகளை படிப்படியாக மூடும் நடவடிக்கையை செப்டம்பர் 20ம் தேதி முதல் தொடங்குகிறது. அதாவது முதல் கட்டத்தில் சில கணக்குகள் மூடப்படும். இருப்பினும், இதைப் பற்றி பயப்படத் தேவையில்லை, ஏனென்றால் ஜிமெயில் கணக்கை மூடுவதற்கு முன், உங்கள் ஜிமெயில் கணக்கு அல்லது மீட்பு மின்னஞ்சலுக்கு ஒரு செய்தி அனுப்பப்படும் .

ஜிமெயில் கணக்கு செயலற்றதாகக் கருதப்படும்  சூழ்நிலைகள் என்ன என்பது தொடர்பான தகவல்களை கூகுள் வெளியிட்டுள்ளது.  கடந்த 2 ஆண்டுகளில் உங்கள் மின்னஞ்சலில் இருந்து எந்த செய்தியும் அனுப்பப்படவில்லை அல்லது பெறப்படவில்லை என்றால் உங்கள் கணக்கு செயலில் இல்லாததாக கருதப்படும். இது தவிர, கூகுள் டிரைவையும் பயன்படுத்தவில்லை என்றாலும், ஜிமெயில் கணக்கு செயலற்றதாகக் கருதப்படும். நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளைப் பயன்படுத்தினால், இரண்டு கணக்குகளும் கடந்த 2 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்டவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.