புனே: அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது, அந்த அளவுக்கு அரசு ஊழியர்களின் மனநிலை மாறி உள்ளது என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டி உள்ளார். மத்திய, மாநில அரசு அலுவலகங்களில், அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகின்றனர். இல்லாவிட்டால் இங்கே ஒன்றும் நடக்காது. ஆவணங்கள் மேல் லஞ்சம் வைத்தால் அது வேகமாக நகரும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் […]