₹ 13.75 லட்சத்தில் பிஎம்டபிள்யூ F 900 GS, F 900 GSA விற்பனைக்கு வெளியானது

பிஎம்டபிள்யூ மோட்டார்டு இந்திய நிறுவனத்தின் புதிய F 900 GS, F 900 GS அட்வென்ச்சர் டூரிங் என இரு மாடல்களும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் ரூ.13.75 லட்சம் முதல் ரூ.14.75 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள இரு மாடல்களின் டெலிவரியும் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கலாம்.

புதிய F900 வரிசை மாடலில் இடம்பெற்றுள்ளதற்போதைய 853சிசி என்ஜினில் இருந்து புதுப்பிக்கப்பட்ட 895சிசி புதிய எஞ்சின் அதிகபட்சமாக 105hp பவர் மற்றும் 93Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.`இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது. முந்தைய மாடலை காட்டிலும் கூடுதலாக 10hp  வரை பவரும், 1Nm டார்க் உயர்ந்துள்ளது. ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக F 900 GS மற்றும் குறைந்த டூரிங் பயன்பாடுகளுக்கு ஏற்றதாக F 900 GSA விளங்க உள்ளது.

முன்புறத்தில் 21 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல ஸ்மோக் வீல் கொண்டிருக்கின்றது. சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் அட்ஜெஸ்டபிள் அப்சைட் டவுன் ஃபோர்க் மற்றும் அட்ஜெஸ்ட்பிள் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் கொண்டிருக்கின்றது.

பிஎம்டபிள்யூ F 900 GS ஆனது ஸ்டைல் ​​பேஷன் (மஞ்சள்) மற்றும் GS டிராபி (லைட்வெயிட்/ரேசிங் ப்ளூ மெட்டாலிக்) என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. F 900 GS அட்வென்ச்சர் பிளாக் ஸ்டோர்ம் மெட்டாலிக் மற்றும் ஒயிட் அலுமினியம் மேட் உள்ளிட்ட இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

பவர் மோடு, டிராக்‌ஷன் கட்டுப்பாடு, ஏபிஎஸ், பை டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்டர் மற்றும் அகலமான 6.5-இன்ச் வண்ண TFT டிஸ்ப்ளே உள்ளன.

  • BMW F 900 GS – ₹ 13.75 லட்சம்
  • BMW F 900 GSA – ₹ 14.75 லட்சம்

(Ex-Showroom)

bmw f 900 gs f 900 gsa

தொடர்புடைய செய்திகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.