
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அஷ்வின் இன்று தனது 38 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் கடந்த 10 வருடங்களாகவே டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை அள்ளி அசத்தி வருகிறார்.

ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடியுள்ள அஷ்வின் 2011 ஐசிசி ஆண்கள் உலகக்கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போன்றவற்றில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இருக்கிறார்.

அனில் கும்பளே, ஹர்பஜன் சிங்-க்குப் பிறகு இந்திய அணியின் பிரதானச் சுழற்பந்து வீச்சாளராகச் செயல்பட்டு வருகிறார்.

இந்திய மைதானங்களில் எதிரணி வீரர்களைத் திணறடிக்க சிறப்பான வியூகங்களை வகுத்து களத்தில் செயல்படுத்துவதில் பெயர்பெற்றவர்.

உலகளவில் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முதல் தமிழக வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.

மூன்று உலகக்கோப்பையில் ஆடிய இவர் தோனி,கோலி, ரோஹித் ஆகிய மூன்று கேப்டன்களின் கீழும் ஆடியிருக்கிறார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 100 டெஸ்ட்களில் விளையாடியுள்ள அஷ்வின் 516 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்திருக்கிறார்.

116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்களும், 65 டி20 கிடிக்கெட் போட்டிகளில் 72 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 முறை 5 விக்கெட்களையும், 8 முறை 10 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார்.

கிரிகெட் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் அஷ்வினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.